மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட நன்மைகள் நடக்கும் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் கடினமான காரியங்களைக் கூட எளிதாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நண்பர்கள் உடைய அறிமுகம் கிடைக்கும். பெண்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. கூடுமானவரை தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு சிக்கனத்தை மேற்கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய முடிவுகளில் விழிப்புணர்வு தேவை.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். தொலை தூர இடங்களிலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்கள் மூலம் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. பெண்கள் எவ்வளவு தடைகள் வந்தாலும் அதனை சமாளித்து முன்னேறுவீர்கள்.
கடகம்:
கடக ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதில் அக்கறையாக இருப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு உடன்பிறந்தவர்கள் உடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாளர்களை கவரும் விவேகம் இருக்கும். பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும் நாளாக இருக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதியபாதை பிறக்கும் அற்ப்புத நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உடைய ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அவர்களுடைய நம்பிக்கையை பெறுவீர்கள். கணவன் மனைவி பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியம் மேம்படும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய நண்பர்கள் உடைய அறிமுகம் உற்சாகத்தை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து உதவிகள் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் நம்பிக்கை அதிகரிக்கும். பெண்களுக்கு அதிர்ஸ்டம் தரும் நாளாக இருக்கும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் பணி சுமை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. பெரியவர்களின் பேச்சைக் கேட்டு நடப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சில மாற்றங்கள் ஏற்படலாம். அரோக்கிய ரீதியான பாதிப்புகள் குறையும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று அதிகம் கவனம் தேவைப்படக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு உறவினர்கள் மூலம் ஆதாயம் காணும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ரீதியான வீண் விரையங்கள் ஏற்படும் என்பதால் கூடுமானவரை விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. பெண்களுக்கு அமைதி தேவைப்படக்கூடிய நாளாக இருக்கும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய குடும்ப தேவைகளை அறிந்து பூர்த்தி செய்யக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பெரிய மனிதர்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கும். இழுபறியில் இருந்த சில விஷயங்கள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்படும். தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து வேலையில் கவனம் செலுத்துவது நல்லது.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எந்த ஒரு முடிவையும் சுயமாக எடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய விரிவுபடுத்தும் திட்டங்கள் மேலோங்கி காணப்படும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்களை சுற்றி இருக்கும் போட்டியாளர்களையும் சமாளித்து உங்கள் திறமையை நிரூபித்துக் காட்டுவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீண் செலவுகள் ஏற்படுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பங்குதாரர்களுடன் இருந்து வந்த சிறு சிறு மனக்கசப்புகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் பழி விமர்சனங்கள் போன்ற பல்வேறு பிரச்சனைகளை சமாளிக்கக்கூடிய தன்னம்பிக்கை பிறக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இழந்த பொருட்களை மீட்டு எடுக்கக்கூடிய வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களுடைய தேவையறிந்து உதவி செய்யும் எண்ணம் மேலோங்கி காணப்படும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சில பொறுப்புகளை சரியாக செய்ய வேண்டும் என்கிற உத்வேகம் இருக்கும். தேவையற்ற மனக் குழப்பங்களை நீக்கி நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக் கொள்வது நல்லது.