மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத தாமதங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்ப்புகள் வலுவாகும் என்பதால் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை நிதானமாக கையாளுங்கள்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு நன்மைகள் நடக்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புகழ் உச்சிக்கு செல்லும். கணவன்-மனைவியிடையே பரஸ்பர ஒற்றுமை நீடிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும் என்பதால் ஆடம்பரத்தை தவிர்ப்பது நல்லது.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற அச்சத்தை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய சிந்தனைகள் உதிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முயற்சி திருவினையாக்கும். எதிர்பாராத சமயத்தில் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சாதகப்பலன் உண்டு.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற சினத்தை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உயர்வு உண்டு. பணம் பல வழிகளில் வந்து சேரும். கணவன் மனைவி இடையே பனிப்போர் நடப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எவ்வளவு தடைகள் வந்தாலும் அதனை எதிர்கொள்ள கூடிய துணிச்சல் பிறக்கும். ஆரோக்கியம் சீராகும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு விருத்தி உண்டாகும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சினைகளை சுமுகமாக முடித்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து மோதல் வலுவாகும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பாராட்டு உண்டு.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனதில் அமைதி நிலவும் நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கீர்த்தி உண்டு. சமயோசிதமாக செயல்படுவதன் மூலம் அனுகூல பலன்களை பெறலாம். வேலை இல்லாதவர்களுக்கு நினைத்த இடத்தில் வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நேர்மையுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அமைதியுடன் இருக்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து பொறுமை காப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் இருந்து வந்த இடையூறுகள் நீங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பண ரீதியான சிக்கல்கள் தீரும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் போட்டிகள் அதிகரிக்கக் கூடிய நாளாக இருக்கிறது எனவே சுறு சுறுப்புடன் செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் எடுத்த முடிவுகளில் பின் வாங்காமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய புகழ் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய திறமையை வெளிக்கொணர கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத நிகழ்வுகள் கூடுதல் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புகள் உண்டு.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தொட்டதெல்லாம் துலங்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். இழுபறியில் இருந்து வந்த பழைய பாக்கிகள் வசூலாகும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் உண்டாவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் அதிர்ஷ்ட யோகம் உண்டு.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனதில் இருந்து வந்த சலனங்கள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தொடர் தடங்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் பொறுமை காப்பது நல்லது. கணவன் மனைவியிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளியிட பயணங்களின் போது கவனம் தேவை. வரவுக்கு மீறிய செலவுகள் உண்டு.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பக்தி நிறைந்த நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அதிகப்படியான உடல் உழைப்பை கொடுக்க வேண்டி இருக்கும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் கூடுதல் முயற்சி தேவை. ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.