மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் உங்களுக்கு சாதகமான பலன்களைக் கொடுக்க இருக்கிறது. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் நன்மைகள் நடைபெறும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சீராக இருக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் சந்திக்க நபர்கள் முக்கிய நபர்களாக இருக்க வாய்ப்புகளுண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் அதிக தொகை ஈடுபடுத்தும் போது கவனம் செலுத்துங்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டகால நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் அமையும். ஆரோக்கியம் மேம்படும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளில் மற்றவர்களுடைய தலையீடு இல்லாதபடி பார்த்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுடைய சுய முடிவு முன்னேற்றத்தை கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கக்கூடிய முயற்சி அனுகூலமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் அதிக தொகையை ஈடுபடுத்தும் போது கவனமுடனிருப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நினைத்ததை நடத்திக் காட்டும் சாதுரியம் இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுறுசுறுப்புடன் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபார ரீதியான கடன் பிரச்சனைகள் தீரும் வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகம் பொறுமை தேவை. கணவன் மனைவி இடையே நடக்கும் பனிப்போர் நீங்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சி நல்ல பலன் தரும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனக் குழப்பங்கள் தீர்ந்து புதிய தெளிவு பிறக்கும் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டநாள் நடைபெற வேண்டும் என்று நினைத்த காரியம் ஒன்று நடக்க இருக்கிறது. ஆரோக்கியம் முன்னேற்றம் அடையும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முடிவுகள் சாதக பலன்களை கொடுப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். தேவையற்ற விஷயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. சுய தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய வேண்டுதல் பலிக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் போராடித்தான் பெற வேண்டியிருக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பங்குதாரர்கள் உடையே ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. பூர்விக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூல பலன் உண்டாகும். ஆரோக்கியம் மேம்படும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்து வைக்கும் அடியில் கவனம் தேவை. முன்பின் தெரியாத நபர்களை நம்பி எந்த ஒரு காரியத்தையும் ஒப்படைப்பதில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் முயற்சி தேவை. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தங்களுடைய பணியில் கூடுதல் அக்கறை ஏற்படும். ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் இருக்கும் குழப்பங்களைத் தீர்த்துக் கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகள் உடைய ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்கள் வேலை தொடர்பான நுணுக்கங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அமையும். ஆரோக்கியம் மேம்படும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் மனதில் நினைத்த காரியம் ஒன்று நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தங்களுடைய நிர்வாக திறமையை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புகள் அமையும். புதிய முடிவுகளை எடுக்கும் பொழுது சற்று கவனம் தேவை. குடும்பத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் தீர்ந்து ஒற்றுமை பலப்படும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முடிவுகள் எடுக்கும் பொழுது ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரித்து காணப்படும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் வரும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்பட கூடுதல் அக்கறை தேவை.