மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்காத வெற்றிகள் கிடைக்கும். தடைப்பட்டுக் கொண்டிருந்த சில விஷயங்களில் அனுகூல பலன்களைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்தினருடன் செலவிடக் கூடிய அற்புதமான நேரமாக இருக்கும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறப்பான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் நினைத்ததை அடைய கூடிய தன்னம்பிக்கை பிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனதில் அமைதி பிறக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சனைகளை மனம்விட்டு பேசி தீர்த்துக் கொள்வீர்கள். நண்பர்களுடைய ஒத்துழைப்பு கிடைக்கும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து எதிர்பார்க்கும் தொகை கிடைத்து மனநிறைவை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டகால பிரச்சனைகள் தீர கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருப்பது நல்லது.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நினைத்ததை வைராக்கியத்துடன் முடிக்கக் கூடிய அற்புத நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகளை தீர்த்து கொள்வீர்கள். தேவையற்ற வீண் விரயங்களை தவிர்க்க சமயோசிதமாக செயல்படுவது நல்லது.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் அற்புத நாளாக அமைய இருக்கிறது. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுப செய்திகளை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் சிறப்பானதொரு முன்னேற்றத்தை காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் பக்க நியாயங்களுக்காக போராடுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் புது தன்னம்பிக்கையுடன் செயல்பட கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தடைப்பட்ட சில காரியங்கள் முடிவுக்கு வரும். சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நேர்மறை உடன் சிந்திக்கும் ஆற்றலுடன் செயல்படக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு உங்களை எதிர்ப்பவர்களை நினைத்து கவலை கொள்ளாமல் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பழைய கடன் பிரச்சனைகளை தீர்க்கும் எண்ணத்தில் இருப்பீர்கள். பொருளாதாரம் மேம்படும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நினைத்ததை பெறுவதில் சில இடையூறுகளை சந்தித்து பின் வெற்றி பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு செயலிலும் முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து வேலையில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வெளியிட பயணங்களின் பொழுது கவனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்ப்பதை விட சிறந்த லாபம் கொடுக்கும் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் யோகமுண்டு. உத்யோகத்தில் இருப்பவர்கள் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உங்களுடைய அவசர முடிவுகள் சில இழப்புகளை ஏற்படுத்தும் என்பதால் கவனம் தேவை.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் புது நபர்களின் வரும் வருகை மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கும் வகையில் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் குறைய அக்கறையுடன் இருப்பது நல்லது.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொருளாதார ரீதியான ஏற்றம் தரும் நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் குடும்பங்களை எளிதாக பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை மேலும் மெருகேற்ற கூடிய அற்புதமான சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றம் தரும் நாளாக அமைய இருப்பதால் நீங்கள் தொட்டதெல்லாம் அற்புதமாக வெற்றியை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகள் வெற்றி தரும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனமுடனிருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மூன்றாம் மனிதர்களை நம்பி ஜாமீன் கையெழுத்துப் போடுவதும் கவனத்துடன் இருப்பது நல்லது.