மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி அடையக்கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு என்பதால் சோர்வுடன் காணப்படலாம். ஆரோக்கியம் கவனம் தேவை.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரிக்கும். அவர்களுடைய தேவைகளை கேட்டு பூர்த்தி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அதிரடியான சில மாற்றங்களை நிகழ்த்துவார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் கருத்தினை முன் வைக்கும் பொழுது தயங்காமல் இருப்பது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை சிக்கனமாக செயல்படுவது நல்லது. சுயதொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நினைத்ததை சாதித்துக் காட்டும் அற்புதமான நாளாக இருக்கும். உத்யோகத்தில் உள்ளவர்கள் தங்கள் மனோ நிலைக்கு ஏற்ப பேசுவதை தவிர்ப்பது உத்தமம்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் உற்சாகம் தரும் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தேவையற்ற பிடிவாதத்தை தவிர்ப்பதன் மூலம் ஏற்றம் காணலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் சில மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். மறதி போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் கூடுமானவரை விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது மூலம் மன அமைதி காணலாம். அமைதி நிலவும். உத்தியோகத்தில் போட்டியாளர்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கணவன் மனைவி இடையே இணக்கம் ஏற்படும். பிள்ளைகள் வழியில் இருந்து வந்த தொல்லைகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெளியிடத்தில் அனுசரித்துப் போகும் சூழ்நிலை ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளுடன் தேவையற்ற சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்பதால் கவனம் தேவை.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தின் மீது அக்கறை அதிகரிக்கும். பெரிய மனிதர்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கும். சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காவிட்டாலும், அடுத்த கட்டங்களை நோக்கிய பயணம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சமூகத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் சாதிக்கும் வலிமை கிடைக்கும் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தேவையான இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் புதிய மாற்றங்களை காண்பீர்கள். ஆரோக்கியத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சில ராஜ தந்திரங்களை கற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் அமையும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு புதிய மாற்றங்கள் மன மகிழ்வை ஏற்படுத்தும் வண்ணம் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. பயணங்களின் மூலம் அனுகூல பலன் உண்டாகும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சில தேவையற்ற மன சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. கூடுமானவரை மூன்றாம் நபர் அதை தவிர்ப்பது நல்லது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஏற்றம் காணும் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகம் பொறுமை தேவை. தேவையற்ற வார்த்தைகள் மூலம் தேவையற்ற இழப்புக்களைச் சந்திக்கலாம் என்பதால் கவனமாக பேசுவது உத்தமம்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியான ஏற்றம் காணப்படும் என்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறும் யோகமுண்டு. சுய தொழிலில் கூட்டாளிகள் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சோர்வு நீங்கி புத்துணர்வுடன் செயல்பட கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூல் ஆகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்பாராத திடீர் திருப்பம் காணலாம். பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். ஆரோக்கியத்துடன் கவனமாக இருப்பது நல்லது.