மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புத பலன்களை கொடுக்கக்கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. சுய தொழில் புரிபவர்களுக்கு பழைய கடனை எப்படியாவது வசூல் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தங்கள் உழைப்பை கூடுமானவரை பொறுப்புணர்வுடன் கொடுப்பது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலப் பலன்களைக் கொடுக்கக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு சாதகப்பலன் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் ஒரு பிரச்சனையை பெரிதாக்காமல் அப்படியே ஆற போடுவது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை நிலவ விட்டுக் கொடுக்க வேண்டும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கூடுமானவரை கவனத்துடன் செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணங்களை தவிர்ப்பது உத்தமம். இழுபறியாக இருந்த சில வேலைகளை முடிக்க கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு மறையும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை நினைத்தவாறு சாதித்து காட்டுவதில் சாதகப் பலனைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அதிரடி மாற்றங்கள் ஏற்படும். புதிய யுத்திகளை கையாள்வதன் மூலம் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய பாதைகள் பிறக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் நினைத்ததை அடைவீர்கள். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி பாதை தெரியும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அரசு வழி காரியங்களில் காலதாமதம் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் நினைத்ததை விட நல்ல பலன்கள் கிடைக்கும். சக பணியாளர்கள் ஒத்துழைப்பார்கள். குடும்பத்தினரின் ஆதரவை பெறுவீர்கள்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கூடுமானவரை விழிப்புணர்வுடன் செயலாற்றுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தங்கள் பங்கு உழைப்பை அதிகம் கொடுப்பது நல்லது. கூட்டு தொழில் புரிபவர்களுக்கு ஏற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முக்கிய பொறுப்புகளை சுமக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் கவனம் தேவை. சுபகாரிய முயற்சிகளில் வெற்றி வாகை சூடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டி மகிழ்வீர்கள். உற்றார், உறவினர்களின் ஆதரவு பெருக கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவியிடையே இருந்து வந்த சண்டை, சச்சரவுகள் நீங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன நிறைவு இருக்கும். மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் எதையும் ஒருமுறைக்கு பலமுறை ஆலோசனை செய்து விட்டு முடிவெடுப்பது நல்லது. அவசர முடிவுகள் ஆபத்தை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நட்பு வட்டம் விரியும். வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் குறித்த விவகாரங்களில் காலதாமதமான பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் உங்கள் குடும்பத்தினரின் ஆதரவை பெறுவதில் இடையூறுகள் ஏற்படலாம். தந்தையுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளியூர் பயணங்கள் மூலம் அனுகூல பலன் உண்டாகும். தொலை தூர இடங்களிலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கும். நீண்ட நாள் சந்திக்க விரும்பும் நபரை சந்திக்கும் வாய்ப்புகள் அமையும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கான முடிவை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சுப நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சிறுசிறு ஏமாற்றங்கள் வழி வந்து செல்லலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புணர்வு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட நல்ல லாபத்தை காணக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சோர்வு அதிகரித்து காணப்படும். மூன்றாம் மனிதர்களை நம்பிப் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை துளிர்விடும் நல்ல நாளாக இருக்கும். திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத பண வரவு திருப்திகரமாக அமைய இருக்கிறது. கொடுத்த கடன் வசூல் ஆகும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் நிம்மதி காணலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மற்றவர்களுடைய விமர்சனங்களை பொருட்படுத்தாமல் உங்கள் பாதையை நோக்கிய பயணத்தில் ஈடுபடுவது நல்லது. ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் படிப்படியாக நீங்கும்.