மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். கணவன் மனைவி இடையே புதிய புரிதலை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. சுயதொழில் செய்பவர்கள் சுயமரியாதை அதிகம் எதிர்பார்ப்பீர்கள். வியாபார விருத்தி உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் ஆர்வம் மேலோங்கி காணப்படும்.
ரிஷபம்: ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பாராத திடீர் மாற்றங்களை சந்திப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெளியிட பயணங்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. பயணங்களின் பொழுது கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு வீண் விரையங்கள் ஏற்படும் என்பதால் ஆடம்பரம் தவிர்ப்பது உத்தமம். ஆரோக்யம் சீராகும்.
மிதுனம்: மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கனவுகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்கள் மூலம் புதிய நண்பர்களை சந்திப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு மன அமைதி தேவை. குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்களுக்கு முடிவு கிடைக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய விடாப்பிடியான கொள்கைகளுக்கு எதிராக செயல்படக் கூடும் என்பதால் கவனம் தேவை. புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதக பலன் உண்டு. கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு சஹா போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் கூடுதல் ஒத்துழைப்பு தேவை.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிந்தனை பலதரப்பட்ட வகைகளாக இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பாசப்போராட்டம் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத சூழ்நிலை உங்களுடைய கோபத்தை தூண்டும் வகையில் இருக்கலாம் என்பதால் பொறுமையை கடைபிடிப்பது.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நீண்டகால விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளும் பாக்கியம் உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் வந்து மறையும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு அனுகூல பலன் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு கடமையில் கூடுதல் அக்கறை தேவை. கவனச்சிதறல் இழப்புகளை ஏற்படுத்தும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு புதிய உற்சாகம் தொற்றிக் கொள்ளும் நல்ல நாளாக அமைய இருக்கிறது. இதுவரை குழப்பத்தில் இருந்து மீள முடியாமல் இருந்த உங்களுக்கு நல்ல பாதை திறக்கும். உத்யோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சனை கள் வலுவாகும் என்பதால் சமயோசிதமாக செயல்படுவது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சோர்வுடன் காணப்படுவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய முதலீடுகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சக போட்டியாளர்கள் உடைய ஆதரவு கிடைக்கும். உங்கள் மீது வீண் பழி சுமத்துவார்கள் என்பதால் எப்பொழுதும் சமயோசிதமாக செயல்படுவது நல்லது. விழிப்புணர்வு தேவை.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்த கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் வந்து சேரும். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு தொலைதூரப் பயணங்களின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்க கூடும். ஆரோக்கியம் மேம்படும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனம் மகிழும் நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிலும் முன்னேறக் கூடிய நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எடுத்த விஷயங்களில் முன் வைத்த காலை பின் வைக்காமல் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் படிப்படியான முன்னேற்றம் இருக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் படிப்படியாக குறையும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். தொலை தூர பயணங்கள் அனுகூல பலன் தரும். உடைமை மீது கவனம் தேவை. தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் ஓய்வு தேவை. ஆரோக்கியம் சற்று குறைவாக இருக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சொந்த முடிவுகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்க இருக்கிறது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகள் மீண்டும் நடைபெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் எதிர்பாராத திடீர் திருப்பங்களை சந்திக்க கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து வேலையில் கூடுதல் கவனம் தேவை. துணிச்சலுடன் செயல்பட கூடிய நாளாக இருக்கும்.