மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் அமைதி இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கி அனுசரித்து செல்வது நல்லது. வெளியிட பயணங்களின் பொழுது கவனம் தேவை. உடலுக்கு ஒவ்வாத உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தடைகளை தகர்த்து எறிந்து முன்னேறுவீர்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் லட்சியத்தை நோக்கி பயணிக்கும் நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு விட்டு சென்ற பணிகள் மீண்டும் தொடரும் வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் பெற்றோர்களுடைய ஒத்துழைப்பை பெறுவது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு திட்டங்கள் நிறைவேற கூடிய நல்ல நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் சாமர்த்தியமாக செய்து உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்க கூடுமான வரை பொறுமை தேவை. குறிப்பாக வார்த்தைகளை பேசுவதில் இனிமை தேவை. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். உத்யோகத்தில் இருப்பவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எடுக்கும் முயற்சிகள் அத்தனையும் உங்களுக்கு சாதகமான பலன்களைக் கொடுக்கும் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. பொருளாதார ரீதியான ஏற்றம் இருப்பதால் குடும்பத் தேவைகளை எளிதாக நிறைவேற்றுவீர்கள். சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு கூடுதலாக பொறுப்புகள் அதிகரிக்கும். மற்றவர்களுடைய வேலையைக்கூட நீங்களே செய்ய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கேலி நுணுக்கங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகளை பெறுவீர்கள்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் தேவையற்ற குழப்பங்கள் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த பகைவர்களுடைய தொல்லைகள் தீரும். உங்களைப் புரிந்து கொள்ளாமல் விட்டு சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் பழைய நண்பர்களை சந்திக்கும் யோகம் உண்டு. புதிய தொழில் துவங்குவதில் கவனம் தேவை. ஆரோக்கியம் சீராக இருக்கும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். எவரையும் எளிதாக சமாளித்து முன்னேற்றத்தை அடையும் வைராக்கியம் இருக்கும். சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வேண்டிய வேண்டுதல்கள் நடைபெறும். உத்யோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற சண்டை சச்சரவுகளைத் தவிர்த்து வேலையில் கவனம் செலுத்தினால் நன்மைகள் உண்டாகும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பணம் பல வழிகளிலும் வந்து சேரும். நீண்டநாள் இழுபறியில் இருந்த வேலைகள் நடக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்யும் ஒரு சிலருக்கு தடைபட்ட கட்டிட பணிகள் மீண்டும் எடுத்து செய்யும் யோசனை உதிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுப்பதில் கவனம் தேவை. கணவன் மனைவி பிரச்சனைகள் தீர்ந்து ஒற்றுமை நிலவும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களை சுற்றி இருப்பவர்களை அடையாளம் கண்டுகொள்ளும் அற்புத வாய்ப்பாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் அமைதியைக் கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்கள் பேசுவதை காது கொடுத்துக் கேட்பது உத்தமம். விலகிச் சென்ற உறவினர் தேடி வரும் யோகமுண்டு. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்க கூடிய சவாலான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தேவையற்ற கடன் வாங்குவதை தவிர்த்து இருப்பதை வைத்து சமாளிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய விடா முயற்சிக்கு பலன் கிடைக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்குவதில் எச்சரிக்கை தேவை. ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்துங்கள்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்துடன் செலவிடக் கூடிய நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் கருத்து ஊடல்களை சமாளிக்க மனம் விட்டு பேசுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்ப்பதை விட நல்ல லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய பேச்சுக்கு மதிப்பு கொடுக்கப்படும். உங்கள் மீது சுமத்தப்பட்ட வீண் பழிகளை பற்றிய கவலைகள் இல்லாமல் நீங்கள் நேர்மையாக நடப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பாதியில் நின்ற வேலைகள் கூட சுலபமாக செய்து முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்பதால் கூடுமானவரை விழிப்புணர்வு தேவை. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத திடீர் மாற்றங்கள் உண்டாகும். மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள் தீரும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் மனகசப்பு அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை நிதானம் தேவை. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் அளவிற்கு லாபம் இருக்கும். புதிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் படிப்படியாக குறையும்.