மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் உங்கள் அனுபவத்தைப் பயன்படுத்தி சாதுரியமாக செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சவாலான விஷயங்களை கூட எளிதாக எதிர்கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உற்சாகத்துடன் செயல்பட கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்டநாள் இழுபறியில் இருந்து வந்த காரியம் ஒன்று முடிய போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் உழைப்பிற்கு உரிய அங்கீகாரத்தை பெறுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உற்றார், உறவினர்களின் ஆதரவை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் உங்களுடைய கை ஓங்கி இருக்க வேண்டும் என்று நினைப்பதை மாற்றிக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்டநாள் வேண்டுதல் நிறைவேறும் நேரம் வந்துவிட்டது.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் புதுமையை படைக்கக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மனதிற்கு பிடித்தவர்களை சந்திக்கக் கூடிய வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் அனுபவ அறிவு நல்ல ஒரு பலன் அளிக்கும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் கைகூடி வரும். மனதிற்கு பிடித்தவர்கள் இடமிருந்து சுபச் செய்திகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய கடன் தொகையை அடைக்கக் கூடிய வழிகள் பிறக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு நல்ல ஒரு அறிவாற்றல் அதிகரிக்கும். எந்த ஒரு விஷயத்தையும் சாதுரியமாக கையாளுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தடைகளைத் தாண்டி முன்னேற கூடிய நல்ல நாளாக அமையும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய அதிகாரத்தை செலுத்தக் கூடிய அமைப்பாக இருக்கிறது. அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தட்டிக் கொடுத்து வேலை ஆட்களை வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன உளைச்சல் அதிகரிக்கும் எனவே கவனம் தேவை.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாளில் நீங்கள் எதிலும் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. வெளியிட பயணங்களின் பொழுது கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்கும். வீண் பழிகளை சுமக்க நேரலாம் என்பதால் சாதுரியம் தேவை.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு துணிச்சலுடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எவ்வளவு தடைகள் ஏற்பட்டாலும் அதை தகர்த்து எறியும் தன்னம்பிக்கை பிறக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு போட்டி பொறாமைகள் வழுபட வாய்ப்புகள் உண்டு என்பதால் கவனம் தேவை. ஆரோக்கியம் மேம்படும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேற்கொள்வீர்கள். பிள்ளைகள் கல்வி விஷயத்தில் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. கிடைக்க வேண்டிய பணத்தொகை சரியான நேரத்தில் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் அறிவுபூர்வமாக சிந்தித்து செயலாற்றுவது நல்லது. உங்கள் உடனிருப்பவர்களே உங்களுக்கு எதிராகச் செயல்படுவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சமூகத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதால் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது