மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் பொறுமையை கடைபிடிப்பது அவசியமாகும். தேவையற்ற இடங்களில் வாக்கு வாதங்களை தவிர்த்தால் நல்லது. கணவன் மனைவிக்கு இடையே புதிய புரிதல் ஏற்படும். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு குடும்பப் பொறுப்புகளை அதிகம் சுமக்க வேண்டியிருக்கும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எந்த ஒரு முயற்சியையும் தளரவிடாமல் செய்வது நலம் தரும். தொட்டதெல்லாம் வெற்றியாக கூடிய இனிய நாளாக இருப்பதால் உங்கள் காரியங்களை சாதித்துக் கொள்ளுங்கள். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைப்பதற்கு கூடுதல் ஒத்துழைப்பை கொடுப்பது நல்லது. உத்யோகஸ்தர்களுக்கு வருமானம் உயர தனித்திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏமாற்றத்தைச் சந்திக்க கூடிய அமைப்பு என்பதால் விழிப்புணர்வு தேவை. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் அதை விரிவுபடுத்தும் பணியில் கூடுதல் அக்கறை கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிரிகளின் சூழ்ச்சியை அறிந்து கொள்ளும் வாய்ப்புகள் அமையும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை செய்வதில் இடையூறுகளும் ஏற்படலாம் எனவே நிதானம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திடீர் திருப்பங்கள் மூலம் அனுகூல பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு தேவை என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் தேவை.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடுமையான வார்த்தைகளை கட்டுப்படுத்துவது நல்லது. குடும்பத்தினரிடம் மரியாதையுடன் நடந்து கொள்வது மன இறுக்கத்தை குறைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கடமையில் கூடுதல் அக்கறை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவையற்ற வம்பு, வழக்குகளில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க குறுக்கு வழியை யோசிக்காமல் இருப்பது நல்லது.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சமயோஜித புத்தியால் அனுகூலமான பலன்களை பெற இருக்கிறீர்கள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே கவனம் தேவை. கணவன் மனைவி உறவில் விழுந்த விரிசல் மேலும் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியம் மேம்படும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முடிவுகளுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் சறுக்கல்கள் ஏற்படலாம் எனவே விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆரோக்கிய அக்கறை தேவை.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் நீங்கள் எதிலும் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். அவசர முடிவுகள் ஆபத்தை கொடுக்கும். சுயதொழிலில் எதிர்பார்த்ததை விட லாபம் பன்மடங்கு உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் புதிய நபர்களின் அறிமுகத்தை தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் அமைதி நிலவ அனுசரித்து செல்லுங்கள்.
தனுசு:
தனுசு தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தொடர் முயற்சிக்கு வெற்றி கிடைக்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தேவையான இடங்களில் பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தன்னடக்கம் தேவை. உங்களுக்கு கீழ் பணிபுரியும் பணியாளர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பொறுமை வேண்டும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து வேலையில் கூடுதல் அக்கறை கொள்வது நல்லது. கணவன்-மனைவி இடையே அன்னோன்யம் கூடும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணவிரயம் ஏற்படலாம்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். சகோதரி, சகோதரர்களுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். மறைமுக எதிர்ப்புகள் அடங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளுங்கள்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்ப்பது அப்படியே நடக்கும் என்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சினைகளை எவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்கள் ஏற்றத்துடன் காணப்படுவீர்கள். வியாபார விருத்தி உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய வேலையைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அமையும்.