மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிந்தித்து முடிவெடுக்கக்கூடிய நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் கடன் தொல்லையில் இருந்து விடுபட வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலையில் இருந்து வந்த நெருக்கடிகள் குறையும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுமை தேவைப்படக்கூடிய நாளாக இருக்கிறது. குடும்பத்தில் உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வழக்கு சார்ந்த விஷயங்கள் சாதக பலன்களை கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சமூக பணிகளில் ஆர்வம் ஏற்படும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறிய விஷயங்களில் கூட கவனம் செலுத்த வேண்டிய நாளாக இருக்கிறது. எதிலும் அலட்சியம் வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு ஆடம்பர செலவுகள் பிரச்சனைகளை கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முயற்சி திருவினையாக்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தேவையற்ற சிந்தனைகள் வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் வரலாம் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு விரும்பிய விஷயங்கள் கிடைக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் அமைதி நிலவும் நல்ல நாளாக இருக்கிறது. தாய் வழி உறவினர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நீண்ட நேர உழைப்பு அயற்ச்சியை கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தேடல் அதிகரிக்கும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் எண்ணம் இருக்கும். சுய சிந்தனை நற்பலன் தரும். குடும்ப ஒற்றுமைக்கு விட்டுக் கொடுப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கடன் ரீதியான நெருக்கடிகள் குறையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண் பழி மறையும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சோதனைகள் நீங்க கூறிய நல்ல நாளாக இருக்கிறது. புதிய பாதைகளில் திறக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு விலை உயர்ந்த பொருட்களில் கவனம் தேவை. குறுக்கு வழியை நாடாதீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய துறையில் அனுபவங்கள் கிடைக்கும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தனம் பெருக கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் புதிய விஷயங்கள் நடக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்ப்புகள் மறையும், போட்டிகள் அதிகரிக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஆக்கத்துடன் செயல்படுவீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை குறையும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகளின் சூழ்ச்சிகள் முறியடிக்கப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு சிரமங்கள் குறையும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நலம் தரும் நல்ல நாளாக இருக்கிறது. நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும் வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் மறையும். புதிய கதவுகள் திறக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பயணங்கள் அனுகூல பலன் தரலாம்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். வரவிற்கு ஏற்ப செலவுகளும் இருக்கும். சுப காரியம் முயற்சிகளில் இடையூறுகள் வரலாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சோதனைகள் வரலாம் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனம் தெளிவாக இருக்க கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். தொட்டதெல்லாம் துலங்கும் நல்ல வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பக்தி அதிகரிக்கும்.