மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்களுடைய ஆலோசனைகள் மற்றவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் திடீரென அறிமுகம் ஆகும் நபர்களிடம் இருந்து எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் முயற்சி முன்னேற்றத்தை கொடுக்கும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற விஷயங்களில் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. மற்றவர்களுக்கு பரிந்துரை செய்வதில் கவனம் வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கலாம்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத இடங்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் சரி செய்ய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் தம்பதியர் ஒற்றுமை நீடிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கொடுக்கப்பட்ட வேலைகளை விரைவாக செய்து முடிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மற்றவர்கள் அனுசரித்து செல்லும் எண்ணம் வர வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கலில் பிரச்சனைகள் வரும் என்பதால் குறுக்கில் செல்லாமல் இருப்பது நல்லது.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடினமான முயற்சி அனுகூலமான பலன்களை கொடுக்கும் வண்ணம் அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத பண சேர்க்கை ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய யுத்திகள் கற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் உண்டு. பெண்களுக்கு தொட்டது துலங்கும் இனிய நாளாகும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் வரக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்தவர்களிடம் மனம் விட்டு பேசக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தன்னம்பிக்கை குறைய கூடிய வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய கடுமையான உழைப்பு அனுகூலமான பலன் தரும். கணவன் மனைவி இடையே விரிசல் வரலாம் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிறைவு இருக்கும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தீராத சுமை எல்லாம் தீரக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் தம்பதியருக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மேன்மை உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளிடம் இணக்கமாக இருப்பது நல்லது.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் இருந்து வந்த நீயா? நானா? போட்டி முடிவுக்கு வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களை கவரும் வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத சவால் நிறைந்த நல்ல நாளாக அமையப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத அனுகூல காரியங்களில் அணுகுல பலன்கள் கிடைக்கும். குடும்ப சுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உடன் இருப்பவர்களே உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள் எனவே எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது நல்லது.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்ப பாரம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. பொருளாதார ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளித்து விடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் நடக்குமா? என்று நினைத்த ஒரு காரியம் நடக்க இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும் இதனால் டென்ஷனுடன் காணப்படுவீர்கள்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் தேவையில்லாமல் மூக்கையும் நுழைக்க வேண்டாம். குடும்பத்தில் மூன்றாம் நபர்களின் தலையிட இல்லாமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த வகையில் லாபம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய திறமைகளை நிரூபித்து பாராட்டுகளை பெறுவீர்கள்