மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். அபிவிருத்தி உட்பட தொழில் வளர்ச்சியை அதிகரிக்க செய்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணி சுமை அதிகரிக்கும் என்பதால் சோர்வு தட்டும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்ப்பை பெற இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பண ரீதியான விஷயங்களில் கூடுதல் அக்கறை தேவை. உங்கள் உடனிருப்பவர்களே உங்களுக்கு எதிராக செயல்படக் கூடும் என்பதால் அலட்சியம் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய சொந்த முடிவுகளை தைரியமாக எடுப்பது நல்லது. அடுத்தவர்களுடைய பேச்சைக் கேட்டு முடிவெடுத்தால் கூடுதல் பிரச்சனைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரியத் தடைகள் விலகி சுப முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திடீர் திருப்பங்கள் ஏற்படும். எதிர்பாராத விஷயங்கள் உங்களை ஆச்சரியப்படுத்தும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதக பலன் உண்டு. திருமணத்தில் இருந்து வரும் குழப்பங்கள் நீங்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கவன சிதறல் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் பொறுப்புணர்வுடன் செயல்படுவது நல்லது.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்த நீங்கள் அதிலிருந்து விடுபட இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தேவையற்ற தொலைதூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு சமூகத்தின் மீது அக்கறை அதிகரித்து காணப்படும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கூட்டு முயற்சிகள் நல்ல பலன் கொடுக்க இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் பணத்தை கையாளும் பொழுது கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும் எனினும் உற்சாகத்திற்கு குறைவிருக்காது. தொலை தூர இடங்களில் இருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய துடிப்பான முயற்சிகளுக்கு வெற்றி வாகை சூட இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் உங்களுக்கு சுப பலன்களைக் கொடுக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தன்னம்பிக்கையை அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. கூட்டு தொழில் புரிபவர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். வியாபாரத்தில் அபிவிருத்தி உண்டு. கணவன் மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் அனுபவித்த துயரத்தில் இருந்து மீள இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பங்குதாரர்கள் மூலம் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு ஏற்றம் தரும் நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு சக பணியாளர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். ஆரோக்கியம் சீராகும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவியிடையே தேவையற்ற வார்த்தைகளை உபயோகிக்காமல் இருப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற வருமானம் பெருகும். புதிய முதலீடுகள் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லை குறையும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய வேகத்தை விட விவேகம் முக்கியம் என்று உணர்ந்து கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தேவையில்லாத அலைச்சல் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உண்டு எனவே கவனம் தேவை. புதிய நட்பு ஆதரவை கொடுக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் நிம்மதி அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம். தொலைதூரப் பயணங்கள் அனுகூல பலன் கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இடத்திலிருந்து பண வரவு உண்டாகும். கணவன் மனைவி இடையே இருக்கும் அன்யோன்யம் பெருகும்.