மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான நல்ல நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றி அடையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தொலை தூர இடங்களில் இருந்து கிடைக்கக்கூடிய செய்திகள் நன்மையை கொடுக்கும் வகையில் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்து காட்ட கூடிய யோகம் உண்டு. கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் சுமூகமாக தீரும். வேலைக்கு செல்பவர்கள் தங்களை சுற்றி இருப்பவர்களை ஒரு கண் வைத்து கவனிக்க வேண்டும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் துடிப்பாக செயல்படக்கூடிய நாளாக இருக்கிறது. உங்கள் மனதில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி தொற்றிக் கொள்ளும். சிறு தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிரிகள் தொல்லை வலுவாகும். உத்தியோகஸ்தர்களுக்கு விடை தெரியாத கேள்விகளுக்கு பதில் கிடைக்க கூடிய அமைப்பு உண்டு.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். உங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய நேர்மை, நாணயம் மற்றவர்களுக்கு உந்துகோலாக இருக்கப் போகிறது. உத்தியோகஸ்தர்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் ஆர்வம் மேலோங்கி காணப்படுகிறது.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு உங்களுடைய குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். பழைய கடன் பாக்கிகள் வசூல் ஆகும் யோகம் உண்டு. புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதகப் பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு நீண்டநாள் இழுபறியில் இருந்து வந்த காரியங்கள் எளிதாக நிறைவேறும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உங்கள் உடனிருப்பவர்களே உங்களுக்கு எதிராக செயல்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தொலைதூரப் பயணங்கள் செய்யும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நட்பு முன்னேற்றத்தைக் கொடுக்கும் வகையில் இருக்கும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி வாகை சூடுவீர்கள். கணவன் மனைவி உறவு சிக்கல் தீரும். சுய தொழிலில் இருப்பவர்கள் பண ரீதியான விஷயங்களில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு அமைதி நிலவும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்து கூட பார்க்காத ஒரு அதிசயம் நடக்க இருக்கிறது. உங்களுடைய கனவு நிஜமாக மாறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. வேலை தேடி அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைத்து செட்டில் ஆகும் வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் லாபம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். உற்றார், உறவினர்களின் ஆதரவு பெருகும். கணவன் மனைவிக்குள் இருக்கும் அன்னோன்யம் அதிகரிக்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இழுபறியில் இருந்து வந்த பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வாகன ரீதியான வீண் விரயங்கள் ஏற்படலாம் எனவே கவனம் தேவை.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது வேறொன்றாக நடக்கும். வருவது வரட்டும் என்று விட்டுவிடுவது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து மோதல்கள் வலுவாகும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நலம் தரும். சிறுதொழில் எதிர்பார்க்கும் லாபம் கிடைப்பது இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நாங்கள் குடும்பத்துடன் சேரக்கூடிய நல்ல நாளாக இருக்கும். பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் ஒன்றிணையும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது உசிதமானது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் வெற்றிப்பாதை தென்படும் வாய்ப்புகள் உண்டு.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நடக்கும் வாய்ப்புகள் உண்டு. ஆடம்பர செலவுகளை குறைத்து சிக்கனத்தை கையாளுவது நல்லது. கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். முன்பின் தெரியாதவர்களின் அறிமுகம் தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கையில் பணம் புழங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இட மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.