மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாளில் அனுகூலமான நல்ல பலன்கள் கிடைக்கும். நீங்கள் நீண்ட நாள் தடைப்பட்டுக் கொண்டிருந்த காரியத்தில் ஈடுபட இருக்கிறீர்கள். தேவையில்லாத பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு புதிய வாய்ப்புகள் கைநழுவி செல்லக் கூடிய அமைப்பு உள்ளதால் விழிப்புணர்வு தேவை.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாளில் நீங்கள் நினைத்ததை சாதித்துக் காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் தேவையற்ற பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்வீர்கள். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்யோகஸ்தர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் அதிகரிக்கும். பெண்களுக்கு மனதில் குழப்பம் நீடிக்கும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாளில் நீங்கள் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். சுய தொழிலில் நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கக்கூடும் என்பதால் கவனம் தேவை. உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் இணக்கம் வேண்டும். அவசரப்பட்டு செய்யும் செயல்கள் தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை அடைய கூடுதல் பொறுப்பு தேவை. தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. கணவன் மனைவி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு மன அமைதி இருக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாளில் நீங்கள் பொருளாதார ரீதியான ஏற்றம் காண ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களின் ஆதரவு குறையும் என்பதால் பொறுமையை இழப்பது நல்லது அல்ல. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உங்களை சுற்றி இருப்பவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் பொறுமையுடன் இருப்பது நல்லது. முன்கோபம் தவிர்த்து குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் மன அமைதி காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பணம் எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து கிடைக்கும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பாராத மாற்றம் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே வாக்கு வாதங்கள் ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்க்கும் லாபம் காணலாம். இதுவரை மந்த நிலையில் இருந்து வந்த விஷயம் சூடு பிடிக்கத் தொடங்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு மேலோங்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணம் கிடைப்பதில் காலதாமதம் ஆகலாம். தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வீண் விரயங்களை சந்திக்க நேரலாம் என்பதால் கூடுமானவரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையில் மூன்றாம் மனிதர்கள் வராமல் இருப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் டென்ஷன் காணப்படும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்துக் காட்ட கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுபச் செய்திகள் பெறுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே நடந்து வந்த பனிப்போர் நீங்கும். பொருளாதார ரீதியான ஏற்றத்தாழ்வுகளை திறம்பட சமாளிப்பீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் வாக்குவாதங்கள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் வந்து செல்லும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் பொறுமையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் நினைப்பதை விட அதிக லாபம் காணலாம். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு இனம் புரியாத பதற்றம் நீடிக்கும். பெண்களுக்கு மன உளைச்சலில் இருந்து விடுதலை கிடைக்கும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத காரியமே மாற்றத்தை கொடுக்கும் வாய்ப்புகள் இருப்பதால் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தங்கள் சமயோஜித புத்தியால் லாபத்தை அதிகரிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாள் சந்திக்க நினைத்த நபர் ஒருவரை சந்திப்பீர்கள். ஆரோக்கியம் சீராகும்.