மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியான முன்னேற்றம் குறித்த கவலைகள் மேலோங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிர்பார்ப்பதை விட லாபம் குறைவாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை எப்படி சுமுகமாக பேசி தீர்த்துக் கொள்வது என்பது பற்றிய சிந்தனை இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நன்மைகள் நடக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய தொழில் துவங்கும் எண்ணத்தில் இருப்பவர்கள் பெரிய மனிதர்களின் ஆதரவைப் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் தடைப்பட்டுக் கொண்டிருந்த சில கனவுகள் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். கணவன்-மனைவி பிரச்சினைகள் தீரும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்ப பிரச்சனைகளை எளிதாக தீர்த்துக் கொள்ள முயற்சி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். ஒருமித்த கருத்தோடு புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடன் பிரச்சினைகள் தீரும். பண ரீதியான விஷயங்களில் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பனிப்போர் முடிவுக்கு வரும். சகோதர, சகோதரிகளுடன் இருந்து வந்த பிரச்சினைகள், மன கசப்புகள் தீரும். சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் நன்மைகள் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிதானம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களால் சில இழப்புகளை சந்திக்க நேரலாம் என்பதால் கவனம் தேவை.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கி சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் அனுகூல பலன் பெறுவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலை தீரும். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் உண்டாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வருமானம் பன்மடங்கு பெருகும் வாய்ப்பு அமையும். ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் படிப்படியான முன்னேற்றம் தரும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்ப ஒற்றுமை சிறப்பாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்தநிலை மாறும். கணவன் மனைவிக்கு இடையே நடந்த பிரச்சினைகளை போட்டு மனதில் கொள்ளாமல் அதை எப்படி தீர்ப்பது என்கிற சாதுரியம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் எண்ணம் மேலோங்கி காணப்படும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் சுறுசுறுப்புடன் செயலாற்ற கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் ஒருவழியாக முடிவுக்கு வரும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து எதிர்பார்க்கும் தொகை கைக்கு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சுயதொழிலில் அனுகூல பலன் பெறுவீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் எதையும் அதன் போக்கில் விடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கவன சிதறல் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை விழிப்புடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் இருக்கும் மூத்த நபர்கள் பேச்சைக் கேட்டு முடிவெடுப்பது உத்தமம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்ப விவகாரங்களில் மூன்றாம் நபர் தலையீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உடைய மனநிம்மதிக்கு அமைதி தேவை. தேவையற்ற விஷயங்களைப் பற்றிய சிந்தனையை தவிர்த்து மனதை ஒருமுகப்படுத்த தியானம் யோகா போன்றவற்றை மேற்கொள்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு ஊடல் வந்து நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய மனநிலை சீரற்றதாக இருக்கும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இதுவரை பட்ட கஷ்டங்களுக்கு ஆன விடிவு காலம் பிறக்க இருக்கிறது. மனதைப் போட்டு வாட்டி வதைத்த சில விஷயங்கள் ஒன்றுமில்லாமல் போய்விடும். உத்யோகத்தில் இருப்பவர்கள் உடைய கேள்விகளுக்கு மேல் அதிகாரிகளிடம் இருந்து பதில் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க உணவு கட்டுப்பாடு மேற்கொள்வது நல்லது.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்த்ததை விட சிறந்த லாபத்தை காண இருக்கிறீர்கள். போட்டிப் போட்டுக் கொண்டிருந்த பகைவர்களுடைய தொல்லைகள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வளர்ச்சி பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய பணி சுமை குறையும். பெண்கள் புதிய தன்னம்பிக்கையுடனும், தைரியம் உடனும் செயல்பட்டு ஆச்சரியத்தை கொடுப்பீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மீண்டும் மீண்டும் நல்லதொரு பலனை காண இருக்கிறீர்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்வீர்கள். வேண்டாம் என்று விட்டு சென்ற உறவுகள் மீண்டும் வந்து இணைய சந்தர்ப்பங்கள் உருவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உடைய வருமானம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் பாராட்டுகள் கிடைக்கும்.