மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்க்காத நன்மைகள் நடைபெறக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள படைகளுக்கு நினைத்தது நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய எண்ணங்கள் நேர்மறையாக சிந்திக்கும். குடும்பத்தில் அமைதி நிலவ விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை அடைவில் சில இடையூறுகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரித்து காணப்படும். உத்யோகத்தில் இருப்பவர்கள் பகையாளர்களை எளிதாக சமாளித்து வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்ப்பதை விட சிறப்பான பலன்களை கொடுக்க இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. பணம் பல வழிகளிலும் வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய கனவுகள் நிறைவேறும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூல பலன் உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பண வரவு சிறப்பாக அமைய இருக்கிறது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உத்தியோக உயர்வு போன்றவற்றில் சாதகப்பலன் உண்டாகும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளித்து முன்னேற கூடிய வகையில் அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்வது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு அமைதி தேவை. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சகோதர சகோதரிகளுடன் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் நண்பர்களுடைய ஆதரவை பெறுவது நல்லது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடங்களிலிருந்து பண வரவு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் நேர்மையாக சிந்திப்பது நல்லது. தேவையற்ற மனக் குழப்பங்களைத் தவிர்த்து வேலையில் கவனம் செலுத்துவது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெளியிட பயணங்கள் மூலம் அனுகூல பலன் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நட்பு வட்டம் விரியும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் பொத்தாம் பொதுவாக நினைக்காமல் என்று சிந்திப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பங்குதாரர்கள் உடைய ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கலகலப்புடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்து காட்ட கூடிய அற்புத வாய்ப்புகள் கிடைக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை தவற விடாமல் பயன்படுத்திக் கொள்வது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் கூடுதல் அக்கறை தேவை. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தீட்டிய திட்டங்களை திறம்பட செயல்படுத்துவீர்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்கிற தெளிவான முடிவு எடுக்கக் கூடிய வகையிலான அமைப்பு உள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் இணக்கம் தேவை.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் தேவையற்ற சண்டை சச்சரவுகள் ஏற்படும் என்பதால் கூடுமானவரை அமைதி காப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வெற்றிகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்கள் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. வெளியிட பயணங்களின் பொழுது உடைமை மீது கவனம் தேவை. புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் வேண்டாம் என்று நினைத்த விட்டு சென்ற சில பொருட்கள் மீண்டும் உங்களிடம் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் கவனம் தேவை.