மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்த காரியங்களை சாதித்துக் கொள்வதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுடைய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற கூடிய அருமையான வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கின்ற முடிவில் இருந்து பின் வாங்காமல் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்குயோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அதிர்ஷ்ட வாய்ப்புகளை இழக்க நேரிடலாம் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரிப்பதால் தலைபாரம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத மகிழ்ச்சி ஏற்பட கூடிய நல்ல நாளாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு இதுவரை இருந்து வந்த மன இறுக்கம் நீங்கி தெளிவான சிந்தனையுடன் இருக்க கூடிய வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு ஊக்கம் உண்டாகும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கற்பனை உணர்வு அதிகமாக காணப்படும். ஆரோக்கிய பாதிப்புகள் அவ்வப்போது ஏற்படும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய விடாமுயற்சி மன வலிமையை அதிகரிக்க செய்யும். சுப காரிய தடைகள் விலகி மனதுக்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகளை பெறுவீர்கள். சுயதொழிலில் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் உங்களுடைய பங்களிப்பை அதிகரிப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் புதுமையை படைக்கும் நாளாக இருக்கும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் வெற்றி அடைய கூடிய வாய்ப்புகள் அதிகம். இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் புதுவரவு ஒன்று இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் வெளியிடங்களில் அறிமுகம் இல்லாதவர்களிடம் வாக்குவாதங்களைத் தவிருங்கள். உத்தியோகஸ்தர்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நட்பு வட்டம் விரிவடைய கூடிய நாளாக இருக்கிறது. புதிய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உடன் பணிபுரிபவர்கள் மூலம் ஆதாயம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும் என்பதால் சிக்கனத்தை கடைபிடிப்பது உத்தமம்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பக்தி மார்க்கத்தின் பக்கம் உங்களுடைய மனம் செல்லும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ள போட்டிகளை துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். தேவையற்ற பகைமையை தவிர்த்து விடுங்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதையும் காலதாமதமாக செய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதால் முன்கூட்டியே திட்டமிட்டு செயலாற்றுவது நல்லது.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனதில் சந்தோஷம் நிறைந்து இருக்கக்கூடிய இனிய நாளாக இருக்கிறது. உங்களை நம்பியவர்களை ஏமாற்ற வேண்டாம். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கி காணப்படும். கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் இருந்து வந்த தடைகள் அகலும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் பல சோதனைகளைத் தாண்டி வெற்றி அடைய நேரும். மனதை தளர விடாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் வந்து மறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சுகவீனம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மனதில் அமைதி ஏற்படும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் வீரம் மிகுந்த செயல்களில் ஈடுபடக் கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். எதிலும் முன் வைத்த காலை பின் வைக்க வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அமைதி ஏற்படும். கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் தீர்ந்து பண ரீதியான விஷயத்தில் சுமூகமான முடிவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் குறைவு எனவே எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனம் சொல்வதை கேட்டு நடக்காமல் புத்தி சொல்வதை கேட்டு நடப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தன்னிறைவு ஏற்படும். பேசும் வார்த்தையில் நேர்மை இருப்பது அவசியமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன பயம் அகலும். கணவன் மனைவி இடையே இருக்கும் நெருக்கத்தை அதிகரித்துக் கொள்வது நல்லது. தேவையற்ற சண்டைகளை தவிருங்கள்.