மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பழைய கடன் பாக்கிகளை வசூல் செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. குடும்ப பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் விடா முயற்சிக்கும் உரிய ஆதரவு கிடைக்கும். திறமைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புணர்வு அதிகரித்து காணப்படும். நிதானத்துடன் இருப்பது நிம்மதிக்கு வழிவகுக்கும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். எதிர்பார்க்கும் வருமானம் கிடைப்பதில் சாதகமான பலன்கள் உண்டாகும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு நண்பர்கள் வட்டம் விரியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சோர்வுடன் காணப்படுவார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க அக்கறை கொள்ளுங்கள்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஒரு விதமான மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்றத்தாழ்வு கலைந்து சுமையுடன் செயல்பட்டால் முன்னேற்றம் நிச்சயம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் மூலம் அனுகூல பலன்கள் உண்டாகும். தாய் வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காண்பீர்கள்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கூடுமானவரை விழிப்புணர்வுடன் செயலாற்றுவது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவ விட்டுக் கொடுத்து செல்வது உத்தமம். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய மனநிலை சீரற்றதாக இருக்கும் என்பதால் கவனம் தேவை. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத நன்மைகள் நடக்கும் அற்புத நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பெரிய மனிதர்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்கள் மத்தியில் மதிப்புடன் நடத்தப்படுவீர்கள். இன்று எதிலும் வெற்றி உங்களுக்குத்தான்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கற்க வேண்டிய விஷயங்களை கற்று உணர கூடிய அற்புத நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உடைய கை ஓங்கி இருக்கும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் மதிப்பு கொடுப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய வேண்டுதல்கள் நிறைவேறும். கணவன், மனைவி பிரச்சனைகள் தீரும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற அலைச்சல் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை கவனத்துடன் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயலாற்றுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய கனவு நிறைவேறும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருக்கும் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பொருளாதாரம் ஏற்றத்துடன் இருக்கும் என்பதால் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. சுய தொழிலில் லாபம் வந்தாலும் அதற்குரிய செலவுகளும் இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நினைத்ததை சாதிக்கும் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வாகன ரீதியான வீண் விரயங்கள் ஏற்படும் என்பதால் கூடுமானவரை கவனத்துடன் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளை உங்களுக்குள்ளேயே பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கூடுதல் சுமையாக இருக்கும். சுயதொழிலில் எதிர்பார்ப்பு தடைகளை சந்திக்கும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். தேவையற்ற நபர்களுடைய விமர்சனத்தை பொருட்படுத்தாமல் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய மனநிலை சீராக இருக்கும். மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் அதிகரித்துக் காணப்படும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் வாகன ரீதியான பயணங்களில் கூடுதல் அக்கறை தேவை. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வேகம் விவேகம் அல்ல என்பதை உணர்ந்து செயல்பட கூடிய நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மறைமுக எதிரிகளை திறம்பட சமாளிப்பீர்கள். அதிகம் உழைப்பைக் கொடுத்து முன்னேறக் கூடிய நாளாக இருக்கும்.