மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கடுமையான போட்டிகளையும் சாதாரணமாக வெற்றி கொள்வீர்கள். சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்கள் இடத்தில் பொறுமை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுய முடிவு எடுப்பதில் நன்மைகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் போட்டிகள் மேலும் வலுவாகும் என்பதால் ஆயத்தமாக இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே சுமூகமான உறவு மேம்படும். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வைராக்கியம் மேலோங்கி காணப்படும். ஆரோக்கியத்தில் படிப்படியான முன்னேற்றம் இருக்கும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்ப்பதற்கு நேர் மாறாக நடக்க வாய்ப்புகள் உண்டு என்பதால் கவனம் தேவை. கணவன் மனைவி பிரச்சனைகள் பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. சுயதொழிலில் உள்ளவர்கள் வெளியிட வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகம் பொறுமை தேவை. ஆரோக்கியம் மேம்படும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுப்புணர்வு அதிகரித்து காணப்படும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கி காணப்படும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். உத்யோகஸ்தர்கள் தங்கள் பணிகளைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உணவு கட்டுப்பாடு மேற்கொள்வது நல்லது.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். குடும்ப செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு வெளியிட பயணங்கள் மூலம் அனுகூல பலன் உண்டாகும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிக உணர்ச்சிவசப்படக் கூடிய நாளாக இருப்பதால் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. கணவன் மனைவியிடையே இருந்து வந்த பனிப்போர் நீங்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான பண விஷயத்தில் எச்சரிக்கை தேவை. மூன்றாம் மனிதர்களின் நம்பிப் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கவலைகள் நீங்கி உற்சாகத்துடன் காணக் கூடிய வாய்ப்புகள் அமையும். உங்கள் மனதில் இருந்து வந்த பல கேள்விகளுக்கான விடையை காணும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொருட் சேர்க்கை அதிகரிக்கும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனமுடனிருப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உள்ளத்தில் புதுவிதமான உற்சாகக் காணப்படும். முகத்தில் பொலிவு ஏற்படும். சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயத்தில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் ஏற்படும். கூட்டாகத் தொழில் புரிபவர்களுக்குள் மனக்கசப்புகள் உண்டாகும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரித்து காணப்படும். தடைப்பட்ட சில விஷயங்கள் தடையில்லாமல் நிறைவேறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பழைய நினைவுகளை அசைபோட்டு பார்ப்பீர்கள். கணவன்-மனைவி இடையே அன்பு மேலோங்கும். தொழில் ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் வளமாகும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் புதுவிதமான தொய்வு ஏற்படலாம். தேவையற்றதை போட்டு குழப்பிக் கொள்ளாமல் உங்கள் வேலையில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் எச்சரிக்கையுடன் இருப்பது உத்தமம். சுய தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிட்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன அமைதி உண்டாகும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும் அற்புத நாளாக அமைய இருக்கிறது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். யாரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போடுவது தவிர்க்கவும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து செயலாற்றுவது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த ஒரு முடிவுகளையும் எடுக்க கூடாது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் வந்து மறையும்.