மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் எதிலும் முன்னேற்றம் காணப்படும். தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் நினைத்ததை அடைய கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சனைகள் தீரும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் தொழில் ரீதியான பிரச்சினைகள் குறையும். வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு உரிய உத்திகளைக் கையாள்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்படலாம். கணவன் மனைவி அன்பு பெருகும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் எதிலும் பொறுமை தேவை. தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் தன லாபம் பெறலாம். உத்யோகத்தில் இருப்பவர்கள் உடைய நேர்மறையான சிந்தனைகளை மேலும் அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் தீரும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நினைத்ததை நினைத்தபடி சாதிக்கும் வல்லமை பிறக்கும். எத்தகைய எதிர்ப்புகளையும் சமாளிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த பகை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய கணிப்பு சரியாக அமைய போகிறது. நண்பர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் உங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப செயலும் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் அமையும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபார ரீதியான எதிர்பார்ப்புகள் நிறைவேற கூடிய அற்புத நாளாகும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் கைகூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய சிந்தனை தெளிவாகும். வெளியிடங்களில் கவனத்துடன் இருப்பது நல்லது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் உடல் ரீதியான அசதி ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு உள்ளத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு ஏற்படுவதில் சாதக பலன் கிடைக்கும். அரசு வழி காரியங்களில் கவனம் தேவை.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கையுடன் செயல்பட கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் வருமானம் பெருகும். உத்யோகத்தில் இருப்பவர்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு முடிவையும் தீர ஆலோசனை செய்து முடிவு எடுப்பது நல்லது.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் தடை இல்லாத வெற்றிக்கான கூடிய யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான பலன்கள் கிடைக்க இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய மனமாற்றம் மற்றவர்களை மகிழ்ச்சிஅடைய செய்யக் கூடியதாக இருக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுப்பது நல்லது.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. அவசர முடிவுகள் ஆபத்தை ஏற்படுத்தலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தேவையற்ற வீண் விரையங்கள் ஏற்படும் என்பதால் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய சிந்தனைகள் தடுமாற வாய்ப்புகள் உண்டு. யோகா, தியானம் மேற்கொள்வது நல்லது.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் குடும்ப பிரச்சனைகளில் கவனம் செலுத்துவது நல்லது. அலட்சியம் மற்றவர்களுடைய அதிருப்தியை சம்பாதிக்கும் என்பதை மனதில் வைத்து செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களை சுற்றி இருப்பவர்களை பற்றி இனம் கண்டு கொள்வீர்கள்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் குடும்ப பொறுப்புகளை சுமக்க வாய்ப்புகள் உண்டு என்பதால் தைரியம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஆரோக்கிய ரீதியான விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பணி சுமை அதிகரிக்கும் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.