மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய வரவு உண்டாகும். செலவுகள் குறைந்து வரவுகள் அதிகரிக்கக் கூடிய நல்ல நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தன்னம்பிக்கை பெருகும். எதையும் சாதிக்க முடியும் என்கிற தைரியமும் உருவாகும். உத்தியோகஸ்தர்கள் கொடுக்கக் கூடிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வது நல்லது.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் அனுகூலமான நல்ல பலன்களை பெற இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து பண ரீதியான பிரச்சினைகள் தீர்க்க கூடிய வகையில் அமைப்பு உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு தேவை எனவே இணக்கமாக செல்வது நல்லது.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்க கூடிய முடிவுகளுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நிதானம் தேவை. அவசரத்தில் நீங்கள் செய்யும் சில காரியங்கள் மூலம் மற்றவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உண்டா? என்பதை கவனிக்க வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்படும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடமையில் கூடுதல் அக்கறையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே அலட்சியம் தவிர்த்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மன சோர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே கவனம் தேவை.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மன ஓட்ட எண்ணங்களில் இருக்கும் குழப்பங்கள் நீங்கும். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கி காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்கள் அதிகரிப்பர்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இருந்தால் உங்களுடைய விடாப்பிடியான முயற்சிகளில் வெற்றி கிடைக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தடைப்பட்டுவந்த சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகி கைகூடிவரும். கணவன் மனைவி இடையே ஒற்றுமைக்கு குறைவிருக்காது. பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் மேலோங்கி காணப்படும். சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய துணிச்சலான முடிவுகள் மற்றவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். எத்தனையே தடைகளையும் சுலபமாக எதிர்கொள்வீர்கள். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். சுயதொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு விருத்தி அடையும் வாய்ப்பு உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் விஷயங்களில் காலதாமதமான பலன்கள் உண்டாகும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிகம் பொறுமையுடன் செயல்பட கூடிய நாளாக இருக்கும். நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும் என்பதால் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மாறும். சுய முடிவுகளை எடுப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு அதிகம் பொறுமை தேவை, தேவையற்ற முன்கோபம் தவிர்ப்பது நல்லது.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமைய இருக்கிறது இதனால் வீட்டுத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்து விடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த முன்னேற்றம் படிப்படியாக ஏற்றம் காணும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடமையில் கூடுதல் கவனம் தேவை. கவன சிதறல் ஏற்படலாம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நீண்ட நாள் நண்பர் ஒருவரை காணக் கூடிய யோகம் உண்டு. தேவையற்ற விஷயங்களைப் பற்றி கவலை கொள்ளாமல் சுயமரியாதையை தக்க வைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பயணங்கள் மூலம் அனுகூல பலன் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய விடாப்பிடியான முயற்சிக்கு பல தடைகள் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு போட்டியாளர்கள் வலுவாக கூடும் என்பதால் உங்களுடைய கூடுகள் ஒத்துழைப்பு கொடுப்பது நல்லது.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கனவுகள் நிறைவேறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் பெரிய மனிதர்களுடைய ஆலோசனையை கேட்டு கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் கவனம் தேவை. ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் குறையும்.