மேஷம்:
இன்று நீங்கள் எடுக்கும் எத்தகையை முயற்சியும் சிறப்பான வெற்றியைப் பெறும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசாங்க காரியங்களில் சிறு தாமதத்திற்கு பிறகு வெற்றி கிடைக்கும். பிறரிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
ரிஷபம்:
மருத்துவ ரீதியிலான செலவுகள் சிலருக்கு ஏற்படும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகம் இருப்பதால் உடலளவிலும், மனதளவிலும் சோர்வு ஏற்படும். உடன் பணிபுரிபவர்களால் சில அனுகூலங்கள் உண்டாகும். ஒரு சிலர் குடும்பத்தினருடன் புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். கொடுக்கல் – வாங்கல் சுமூகமாக இருக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சற்று சோம்பல் தனம் ஏற்படுவதால் உற்சாகத்துடன் கல்வியில் ஈடுபட வேண்டும்.
மிதுனம்:
வாழ்க்கை துணையால் பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். பணியிடத்தில் மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கும். மறைமுக எதிரிகளால் சில தொந்தரவுகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் உங்களுக்கு லாபம் உண்டாகும். உடல் நலத்தில் கவனம் கொள்ள வேண்டும்.
கடகம்:
சிலருக்கு புது வீடு, வாகனம் வாங்கும் அமைப்பு ஏற்படும். வீட்டுக்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல்நலம் சிறப்பாக இருக்கும். உறவினர் வகையில் சிலருக்கு மனவருத்தம் ஏற்படும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். நண்பர்கள் வகையில் சிலருக்கு தனலாபம் ஏற்படும்.
சிம்மம்:
உடல்நல பாதிப்பு ஏற்பட்டு நீங்கும். சகோதர, சகோதரிகள் வகையில் அனுகூலம் உண்டாகும். சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நலம். சிலருக்கு பெண்கள் மூலம் லாபம் ஏற்படும். சிலர் புனிதத் தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
கன்னி:
பணம் தொடர்பான விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை கூடும்.. சிலருக்கு பெற்றோர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும். பணியிடத்தில் சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். அரசாங்க ரீதியில் நீங்கள் எதிர்பார்த்த சலுகைகள் பணியிடமாற்றம் போன்றவை கிடைக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
துலாம்:
எடுக்கின்ற முயற்சிகளில் நீண்ட இழுபறிக்குப் பிறகு வெற்றி காண்பீர்கள். தம்பதிகளுக்குள்ளாக கருத்து வேறுபாடு ஏற்படலாம். தொழில், வியாபாரங்களில் சராசரியான லாபம் கிடைக்கும். மாணவர்கள் சிறப்பாக கல்வி பயில்வார்கள். வெளியூர், வெளிநாடுகளில் இருந்து சிலருக்கு நல்ல செய்தி வரும். பூர்வீக சொத்து விவகாரங்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும்.
விருச்சிகம்:
உடல் நலம் சிறப்பாக இருக்கும். வாகனங்களை இயக்கும் போது கவனம் தேவை. குடும்பத்தினரால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். வெளி நபர்களால் தனலாபம் ஏற்படும். சக பணியாளர்களிடம் தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
தனுசு:
சிலருக்கு மருத்துவ ரீதியான சில செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரங்களில் புதிய ஒப்பந்தங்கள், லாபங்கள் கிடைக்கும். குழந்தைகள் வழியில் சிலருக்கு மன வருத்தம் ஏற்படும். வெளியூர், வெளிநாடு விடயங்களில் உங்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். திருமண வயதில் உள்ள குடும்ப பெண்களுக்கு நல்ல வரன் அமையும். பதவி உயர்வு, விரும்பிய பணி இடமாற்றம் உத்தியோகஸ்தர்களுக்கு கிடைக்கும்.
மகரம்:
தொழில், வியாபாரத்திற்கு வேண்டிய கடன் உதவி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் ஏற்படும். குழந்தையில்லா தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு சிறிது தாமதத்திற்கு பிறகு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சற்று மந்த நிலை அடைவார்கள். சிலருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு நீங்கும்.
கும்பம்:
புதிய ஆடை, ஆபரணங்கள் போன்றவற்றை வாங்குவீர்கள். சிலர் குடும்பத்துடன் வெளியில் சென்று வருவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் கூடுதலான பொறுப்புகளும், பணி சுமையும் உண்டாகும். நெருங்கிய உறவுகள் மூலம் தனலாபம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள், வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவார்கள். வெளியூர் பயணங்களால் அதிக லாபம் இருக்காது.
மீனம்:
புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். பெற்றோர்களின் அன்பும், ஆசியும் முழுமையாக கிடைக்கும். புதிய வீடு, நிலம் வாங்கும் முயற்சிகளில் தாமதம் ஏற்படும். உறவினர்கள் மத்தியில் உங்களின் செல்வாக்கு கூடும். பணியிடங்களில் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். பெண்களால் சிறிது மன வருத்தம் ஏற்படும்