மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் அளவிற்கு லாபம் பெருகும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நிதானம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. விநாயகரை வழிபட நினைத்தது நடக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் சில விஷயங்களில் தடை, தாமதங்கள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மனதில் இருந்த அந்த கவலைகள் நீங்கும். பொருளாதாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பண ரீதியாக அலைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பெருமாள் வழிபாடு செய்து வர நன்மை நல்லது நடக்கும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீர்ந்து ஒற்றுமை நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மந்த நிலை மாறி லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். யோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களுடன் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. ஆரோக்கியம் சீராகி வரும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பெரிய தொகையை ஈடுபடுத்தி அதிக லாபம் காணும் யோகம் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த பனிப்போர் நீங்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி முன்னேற்றம் காண்பீர்கள்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் தடை நீங்கி வெற்றி காணும் யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அரசு வழி காரியங்களில் அனுகூல பலன் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகரித்து காணப்படும். கணவன்-மனைவி பிரச்சினைகளை வெளியிடங்களில் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்ததை நினைத்தபடி சாதித்து காட்ட கூடிய அற்புதமான யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்துவிடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் விரும்பிய ஒரு விஷயம் உங்களுக்கு கிடைக்கும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இருக்கும் குழப்பங்களுக்கான விடை கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற விஷயங்களில் வரும் தேவையற்ற குழப்பங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. நியாய தர்மத்தை அறிந்து செயல்படும் இடங்களில் உங்களுக்கு மதிப்பு உண்டாகும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இறை வழிபாடுகளில் அதிக ஆர்வம் காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் உடைய நன்மதிப்பைப் பெறும் பாக்கியம் அமையும். உத்யோகத்தில் இருப்பவர்கள் உடைய முன்னேற்றத்தில் நண்பர்களுடைய ஆதரவு கிடைக்கும். பொருளாதாரம் மேம்படும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்ததை அடைய போராட வேண்டியிருக்கும். எதிலும் நிதானமாக யோசித்து செயல்படுவது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து பொறுமையை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் உடைய ஆதரவு கிடைக்கும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் சாதகப்பலன் உண்டாகும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் வெளியிட பயணங்களின் பொழுது கவனத்துடன் இருப்பது நல்லது. வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகளில் பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுப செய்திகள் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே மேலும் அன்பு பெருகுவதற்கு சந்தர்ப்பங்கள் அமையும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருக்கும் மகிழ்ச்சி நீடிக்கும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி ஆகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி செழிப்பான சூழ்நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் சில வாக்குவாதங்கள் ஏற்படலாம் எனவே கவனத்துடன் இருப்பது நல்லது. பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எத்தனையே தடைகளையும் தகர்த்து எறிந்து முன்னேறக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நெடிய பயணங்கள் மூலம் சில முக்கிய விஷயங்கள் நடக்கும். தேவையற்ற நபர்களுடைய அறிமுகத்தை உத்யோகஸ்தர்கள் தவிர்த்துக் கொள்வது நல்லது. நீங்கள் எப்போதோ செய்த நல்ல காரியத்திற்காக விளைவு இன்று காண்பீர்கள். மனதில் அமைதி இருக்கும்