மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு குடும்பத்துடன் செலவிடக் கூடிய அற்புத அமைப்பாக இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை குறையும். கணவன் மனைவி ஒற்றுமை சிறக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். சிவ வழிபாடு செய்வது நல்லது.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்வதை தவிர்க்கவும். நினைத்த காரியங்கள் கைகூடி வரும் யோகமுண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் உடைய ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளை வெளியில் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. சுயதொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிலும் சில தடை தாமதங்கள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. வழக்குகளில் வெற்றி காண்பீர்கள். சிவ வழிபாடு மேற்கொள்வது நல்லது.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நினைத்ததை சாதித்து காட்ட கூடிய அற்புதமான நாளாக அமையும் இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கடிகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி இருக்கும். தொழிலில் நீங்கள் எதிர்பார்ப்பதை விட லாபம் பன்மடங்கு பெருகும். அக்கம்பக்கத்தினரின் ஆதரவை பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். விஷ்ணு வழிபாடு செய்வது நல்லது.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாளில் இறை சிந்தனை மேலோங்கி காணப்படும் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் உங்களுடைய முன்கோபத்தை குறைத்துக் இனிமையான பேச்சாற்றலை வெளிப் படுத்துவது நல்லது. முருக வழிபாடு செய்வது நல்லது.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிமையான நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே நடந்து கொண்டிருந்த வாக்குவாதங்கள் தீர்ந்து சுமூகமான முடிவு வரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகள் அனுகூல பலன் கொடுக்கும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. வீண் விரயங்கள் ஏற்படாமலிருக்க ஆரோக்கியத்தை கவனிப்பது நல்லது. கந்தன் வழிபாடு மேற்கொள்ளுங்கள்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. எதிர்பாராத இடங்களிலிருந்து எதிர்பார்க்கும் தொகை கைக்கு வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீர்ந்து மன அமைதி கிடைக்கும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் எதையும் ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து பின் முடிவெடுப்பது நல்லது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். விநாயகர் வழிபாடு மேற்கொள்ளுங்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்நாள் சிறப்பாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வருபவர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் நடைபெறும். போட்டியாளர்களை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பனிப்போர் முடிவுக்கு வரும். ராகு கேது வழிபாடு செய்ய நன்மைகள் நடக்கும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்துடன் செலவிடக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிதானம் தேவை. தேவையற்ற வார்த்தைகளை அடக்கி ஆள்வது நல்லது. பகை ஒழிய அமைதி தேவை. குடும்பத்தில் குழப்பங்கள் தீரும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளுக்கு அனுகூலப் பலன்கள் உண்டாகும். சனீஸ்வர வழிபாடு நன்மை தரும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்நாள் பொருளாதார ரீதியான பிரச்சனைகளை சமாளிக்கக்கூடிய தன்னம்பிக்கை வளரும் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உத்யோகத்தில் இருப்பவர்கள் கிடைப்பதை வைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். சுய தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். புதிய பணியாட்களை அமர்த்த திட்டமிடுவீர்கள். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும். குடும்ப ஒற்றுமைக்கு கும்பேஸ்வரரை வழிபடுங்கள்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஆரோக்கிய ரீதியாக சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிர்பாராத வகையில் பணவரவு சிறப்பாக இருக்கும். நண்பர்களுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். மனக்குழப்பம் தீர சந்திர பகவானை வழிபடுங்கள்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் அற்புத நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் மேலும் அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசிக் கொள்வது நல்லது. குடும்பத்தில் பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைக்கும். சுய தொழிலில் நீங்கள் சில தடைகளை சந்தித்தபின் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை குறையும். சிவ வழிபாடு மேற்கொள்ளுங்கள் நல்லது நடக்கும்.