மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்க்கும் வகையில் நன்மைகள் நடக்காவிட்டாலும் சுமாரான பலன்கள் உண்டு. கணவன் மனைவி இடையே நடக்கும் பிரச்சனைகளை பெரிதாக ஊதி பெரிதாக்க வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வருமானத்தை அதிகரித்துக் கொள்ள கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். தடைப்பட்ட காரியங்களில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டாம்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சிந்திக்கும் சிந்தனை எதிர்மறையாக இருக்கக்கூடும் என்பதால் பொறுமையை கையாளுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய சரக்குகள் அமோகமாக விற்பனையாகும். கணவன் மனைவி ஒற்றுமையில் மற்றவர்களுடைய கண் திருஷ்டி படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்தது நடக்கும் யோகம் உண்டு.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அமோகமான பலன்கள் கிடைக்க இருக்கிறது. தேவையற்ற விஷயங்களை நினைத்து குழப்பிக் கொள்ளாமல் வருவது வரட்டும் என்று இருங்கள். தொலைதூர போக்குவரத்து தொடர்பான விஷயங்களில் கூடுதல் எச்சரிக்கை தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் முன் வைத்த காலை பின் வைக்காமல் இருப்பது நல்லது. ஒரு விஷயத்தில் முடிவு எடுக்கும் முன்பு ஆயிரம் முறை யோசிக்கலாம் ஆனால் எடுத்த பின்பு யோசிக்க வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய அந்தஸ்தை உயர்த்திக் கொள்வீர்கள்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் முழுமூச்சாக உங்களுடைய வேலையை செய்து முடிப்பீர்கள். மற்றவர்கள் பாராட்டும் படியான விமர்சனங்களை மட்டும் எடுத்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் வலுவாகும் எச்சரிக்கை தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு வீண் பழி சுமக்க நேரிடும் என்பதால் விழிப்புணர்வுடன் செயலாற்றுவது நல்லது.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் முக்கிய முடிவுகளை ஒத்தி வைப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே திட்டமிட்ட காரியங்கள் சிதறாமல் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன இறுக்கம் அதிகரிக்கும் எனவே இறைவழிபாட்டில் கவனம் செலுத்துவது நல்லது.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துணிச்சலாக சில முடிவுகள் எடுக்க வேண்டிய நாளாக இருக்கிறது. எந்த ஒரு விஷயத்திலும் தயக்கம் காட்ட வேண்டாம். சுய முடிவு எடுப்பது நல்லது. கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் சேர்க்கை வெற்றி வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் ஆரோக்கிய ரீதியான விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. கணவன் மனைவி இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்த்து கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த விஷயங்களில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நடக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகளுக்கு உங்களுடைய நண்பர்களின் ஆதரவு பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும் எனவே ஆடம்பரச் செலவுகளை குறைத்து சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு தேவை எனவே இணக்கமாக செல்லுங்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். இழந்த ஒன்றை பெற்றது போன்ற உணர்வு ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத நபர்களின் அறிமுகம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. கொடுக்கல் வாங்கல் பிரச்சனையை விரைவாக தீர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு குடும்பத்துடன் செலவிடக் கூடிய நல்ல அமைப்பு உண்டு. ஆரோக்கியம் மேம்படும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியைக் கொடுக்க இருக்கிறது. தளராத மனம் கொண்ட நீங்கள் எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் இரட்டிப்பாகும். சிலருக்கு புதிய தொழில் துவங்கும் எண்ணம் மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான ஆர்வம் அதிகரிக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய அமைப்பு ஏற்றம் தரும்படியாக இருப்பதால் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மற்றவர்களுடைய சுயரூபம் தெரிய கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நேர்மறையான சிந்தனை அதிகரித்து காணப்படும். முக்கிய விஷயங்களில் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளுங்கள்.