மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான நல்ல பலன்கள் கிடைக்க கூடிய நாளாக அமைய இருக்கிறது. உங்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சக பங்குதாரர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். அதிகாரத்தில் உள்ளவர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் உழைப்பவர்களுக்கு எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேற்றும் நல்ல நாள்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்க கூடிய நல்ல நாளாக அமைகிறது. நீண்ட நாட்களாக மனதில் இருந்த மனக்கசப்புகள் தீரும். தம்பதியர் ஒற்றுமை ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நினைத்த நபர் ஒருவரை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பால் முன்னேற்றம் காணும் யோகம் உண்டு.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிரடியான சில மாற்றங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முக்கிய பிரச்சனைகளை பற்றிய முடிவுகள் எடுப்பதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் கருத்துக்களை தைரியமாக முன்வைத்து பாராட்டுகளை வாங்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் இருந்து வரும் பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மனதை அழுத்திக் கொண்டிருக்கும் விஷயம் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய நட்பு வட்டம் விரியக் கூடிய சந்தர்ப்பம் உண்டு. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்ததை சாதித்துக் காட்டும் அமோகமான நாளாக இருக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தேவைகளை அறிந்து பூர்த்தி செய்து கொள்வீர்கள். குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களைப் பற்றிய கவலை மேலோங்கி காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வராது என்று நினைத்த பணம் கைக்கு வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புத்துணர்ச்சியுடன் செயல்பட கூடிய அம்சமான நாளாக இருக்கும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முயற்சிகளுக்கு காலதாமதமான பலன் கிடைக்கும் என்பதால் எதிலும் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய முதலீடுகள் செய்யக் கூடிய வாய்ப்புகள் அமையும். முன்பின் தெரியாதவர்களின் அறிமுகம் தவிருங்கள். உத்தியோகஸ்தர்களுக்கு நிதானம் தேவை.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய ராசிக்கு சாதகமற்ற அமைப்பு என்பதால் பேச்சில் கவனம் தேவை. சொல்லும் சொல்லும், செய்யும் செயலிலும் நிதானம் தேவை. கணவன் மனைவியிடையே ஒற்றுமை ஓங்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் அகலும். சுய தொழிலில் லாபம் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு எண்ணிய எண்ணம் ஈடேறும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கவனமாக செயல்பட வேண்டிய நாள் ஆக இருக்கும். வெளியிட பயணங்களின்போது ஜாக்கிரதையுடன் பயணிப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இனம் புரியாத குழப்பம் நீடிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு தேவை என்பதால் இணக்கமாக செல்வது நல்லது.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தடைகளைத் தாண்டிய வெற்றியை காண கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. உங்களை சுற்றி இருக்கும் மறைமுக சூழ்ச்சிகள் முறியடிக்கப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இழுபறியான காரியங்கள் சுலபமாக முடியும். உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற சங்கடங்கள் தவிர்த்து நிதானத்துடன் இருப்பது நல்லது.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் விரும்பிய விஷயங்களை அடைய நினைப்பீர்கள். தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவி இடையே புதிய பிரச்சனை உருவாக வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருக்கும் நபர்களுக்கு தொலைந்து போன பொருள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தங்கள் அதிகாரத்தை காண்பிக்கக் கூடிய நல்ல தருணங்கள் அமையும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் முயற்சியில் வெற்றி பெறக் கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் மற்றவர்களுடைய பலவீனம் அறிந்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் இருக்க கூடிய முடிவுகளுக்கு உங்களுடைய குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தேவையற்ற வெளி நபர்களின் விமர்சனங்களை தவிர்த்து கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் பன்மடங்கு பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்கோபம் தவிர்ப்பதன் மூலம் ஏற்றம் காணலாம்.