மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்து காட்ட கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வகையில் சில இழப்புகளை சந்திக்க நேரலாம் என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் எச்சரிக்கை தேவை.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் எதையும் ஒன்றுக்கு பலமுறை சிந்தித்துச் செயலாற்றுவது நல்லது. கணவன் மனைவி உறவுக்கு இடையே இருக்கும் கருத்து மோதல்கள் மேலும் வழுவாமல் இருக்க விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீர்ந்து ஒற்றுமை பலப்படும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் உங்களுடைய கனவுகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகளை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மேலிட அதிகாரிகளுடன் தேவையற்ற பேச்சு வார்த்தைகளை வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயலாற்றுவது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து மோதல்கள் மேலும் வலுவாக மல் பார்த்துக்கொள்ளுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவை பெறுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு அமைதி தேவை.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். தேவையற்ற விஷயங்களில் நீங்கள் மூக்கை நுழைத்து விட்டு பிறகு வருத்தப்பட வேண்டாம். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிராசையாக போவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் குறைத்துக் கொள்வது நல்லது.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது நல்லது. வெளியிட பயணங்களின் பொழுது உடைமை மீது கவனம் தேவை. பிள்ளைகளின் கல்வி சார்ந்த விஷயத்தில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபத்தை அடைய போகிறீர்கள்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மேன்மை உண்டாகும். நீங்கள் முழு ஓய்வு எடுத்துக் கொள்ளக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் செலுத்துவது நல்லது. பண ரீதியான விஷயத்தில் மூன்றாம் மனிதர்களை நம்பிப் புதிய பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் நீங்கள் சில இழப்புகளை சந்திக்க நேரும். நீண்டநாள் இழுபறியில் இருந்த வேலை முடிய விட்டு கொடுத்து செல்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் அகலும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை மேலோங்கி காணப்படும். உறவினர்களின் ஆதரவு பெருகும். விமர்சனங்களை தாண்டிய வரவேற்பு நிச்சயம் இருக்கும் என்பதால் கவலை கொள்ள தேவை இல்லை.
தனுசு:
தனுசு பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய வாழ்க்கையில் தேவையற்ற பிரச்சனைகளை போட்டு குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நலம் தரும். கணவன் மனைவி இடையே நெருக்கம் மேலோங்கி காணப்படும். நண்பர்களின் வட்டம் புதிதாக விரிவடைய கூடும். புதிய சேர்க்கை உங்களுக்கு அனுகூல பலன்களை கொடுக்க இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மகிழ்ச்சியுடன் காணப்படும் நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தொடர் தோல்விகள் ஏற்படும் என்பதால் கூடுமானவரை கூடுதல் ஒத்துழைப்பை கொடுப்பது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சனைகள் தீரும். வம்பு வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும் என்பதால் ஒத்தி வைப்பது நல்லது.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகம் உள்ள அமைப்பு என்பதால் நீங்கள் எடுத்ததெல்லாம் வெற்றியாகும் அற்புத நாளாக இருக்கிறது. கணவன் மனைவி இடையே இருக்கும் ஒற்றுமைக்கு வலு சேர்க்கும் வகையில் நீங்கள் மனம் விட்டு பேசுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அங்கு உள்ள பலன் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட பயணங்கள் ஏற்படும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பாராட்டுகள் குவிய கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தேவையற்ற எதிர்பார்ப்புகள் தேவையற்ற சிந்தனைகளை உண்டாக்கும் என்பதால் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. உங்களுடன் இருப்பவர்கள் உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை. ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து கொள்ளுங்கள்.