மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் தரக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. வெளியிட பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் எதிர்பாராத திடீர் லாபம் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லை வலுவாகும் எனவே கவனம் தேவை. சுய சிந்தனையுடன் இருப்பது நல்லது.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் தானாக வந்து சேரும். சுய தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் அபிவிருத்தி காண்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு தேவையில்லாத அலைச்சல் ஏற்படும் என்பதால் சமயோசிதமாக செயலாற்றுவது உத்தமம். கனிவுடன் பேசுவது அமைதியைக் கொடுக்கும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனதில் இருந்து வந்த கேள்விகளுக்கு விடை கிடைக்கக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் கூடுதல் உழைப்பு தேவை.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடமையில் கூடுதல் அக்கறை தேவை. குடும்பத் தேவைகளை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் பழைய கணக்கு வழக்குகள் முடிவுக்கு வரும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சனைகள் தீரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் அமைதி கிடைக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பேச்சில் இனிமை தேவை. தேவையற்ற வார்த்தைகளை பிரயோகிக்காமல் இருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையும். சுபகாரிய முயற்சிகளில் ஏற்பட்டுக் கொண்டு இருந்த தடைகள் விலகும். சிறு தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மந்த நிலை மாறி சூடு பிடிக்கத் தொடங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கணிவு தேவை. ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடந்த காலத்தை நினைத்து வருத்தப்படக்கூடிய நாளாக இருக்கும். தேவையற்ற கவலைகளை போட்டு மனதில் வைத்துக் கொள்ளாமல் வருவது வரட்டும் என்று இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தன லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய வாய்ப்புகளை பெறக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய துணிச்சலான முடிவுகள் மற்றவர்களை ஆச்சரியப்படுத்தும். முன் வைத்த காலை பின் வைக்காமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் கவலைகள் மனதை விட்டு அகலும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை தேவை. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கவலைகள் நீங்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணம் பல வழிகளிலும் இருந்து வரும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற போராடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்க்க வேலையில் கூடுதல் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் சிறுசிறு குறைகள் வந்து நீங்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மன கவலைகள் அகலும். எடுக்கக்கூடிய முடிவுகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதகப் பலன் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் பணம் ரீதியான விஷயங்களில் புதிதாக எதையும் நம்பாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளால் உடைய ஆதரவு தேவை.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனதிலே இருந்து வந்த குழப்பங்கள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அனுகூல பலன் உண்டு. எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் தவிர்ப்பது நல்லது. தொலை தூர பயணங்கள் செல்ல வாய்ப்பு உண்டாகும். புதிய நட்பு வட்டத்தை விரிவுபடுத்திக் கொள்வீர்கள். கணவன் மனைவி இடையே ஊடல் குறையும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்ப விஷயங்களில் மற்றவர்களை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தடைபட்ட காரியங்கள் நடைபெறும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் முன் கோபத்தை குறைத்து பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். ஆரோக்கியம் மேம்படும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முகத்தில் புதிய பொலிவு தென்படும். இதுவரை இல்லாத உற்சாகம் தொற்றிக் கொள்ளும். புதிய நபர் ஒருவரை சந்திக்க இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மந்த நிலை காணப்பட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. உத்தியோகஸ்தர்களுக்கு இதுவரை நிலுவையில் இருந்து வந்த பழைய வேலைகளை சேர்த்து முடிக்கக் கூடிய சூழ்நிலை உண்டு. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்