மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட நல்ல பலன்களைக் காண இருக்கிறீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த பனிப்போர் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் கையில் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை கூடும் என்றாலும் உற்சாகத்திற்கு குறைவிருக்காது.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் இருக்க கூடிய முடிவுகளுக்கு காலதாமதமான பலன்கள் கிடைக்கும் என்பதால் பொறுமை காப்பது நல்லது. அவசரமான முடிவுகள் குழப்பத்தை ஏற்படுத்தும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் வருமானம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவைகள் சாதக பலன் உண்டு.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் புதிய தன்னம்பிக்கையுடன், உற்சாக பொலிவுடன் தோற்றம் அளிப்பீர்கள். உங்கள் மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி விடும். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சுற்றி உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை கூடும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய சிந்தனைகளை நேர்மறையாக மாற்றிக் கொள்வது நல்லது. எந்த தோல்விகள் வந்தாலும் அது வெற்றிக்கான முதல் படியாக எடுத்துக் கொள்ள வேண்டும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் சோர்ந்து போகாமல் வீரநடை போடுபவர்களுக்கு வெற்றி நிச்சயம். உத்தியோகஸ்தர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் எதிலும் கவனமுடனிருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நீண்டநாள் பயணங்கள் கூட செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எந்த ஒரு முடிவையும் அவசரப்பட்டு எடுக்காமல் இருப்பது நல்லது. ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் தீரும். பணிபுரிபவர்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படலாம்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய வீட்டுத் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கை நிறைய பணம், காசு புழங்கும் யோகம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உங்களுடன் இருந்து கொண்டே உங்களுக்கு எதிராக சிலர் செயல்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் மறைமுக எதிரிகளின் தொல்லையால் அவதிப்பட நேரிடலாம். கணவன் மனைவி இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிம்மதி இருக்கும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி காணும் யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளியிட பயணங்களில் கவனம் தேவை. ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் படிப்படியாக குறையும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நல்ல பலன்களைக் காண இருக்கிறீர்கள். உங்கள் மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சில மனக்கசப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றி வாய்ப்புகளை அள்ளிக் குவிக்க இருக்கிறீர்கள். பெரிய தொகை ஈடுபடுத்தி அதிக லாபம் காணலாம். ஆரோக்கியம் மேம்படும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் குடும்பத்தில் இருக்கும் சிறு சிறு பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. நீங்களாகவே ஒன்று நினைத்து செயல்பட வேண்டாம், எதையும் உரியவர்களிடம் கேட்டு தெளிவு பெறுவது நல்லது. சுய தொழிலில் லாபம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும் இதனால் டென்சனுடன் காணப்படுவீர்கள்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் கவனம் தேவை. உங்களை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தானாகவே வந்து சேரக் கூடிய வாய்ப்புகள் உண்டு. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை பற்றிக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.