மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபார ரீதியான விருத்தி சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேல் அதிகாரிகளுடன் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இணக்கமாக நடந்து கொள்வது நல்லது. கணவன் மனைவி பிரச்சனைக்கு முடிவு கிடைக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்க்கக்கூடிய விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்பதை உணர்ந்து செயல்படுவது உத்தமம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மறைமுக போட்டியாளர்களை எதிர்கொள்வீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைக்கக் கூடிய விஷயங்களில் காலதாமதமான பலன்கள் கிடைக்கலாம். கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் மேலும் அதிகரிக்கும். சுபகாரியத் தடைகள் விலகும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு வளர்ச்சி பாதையை நோக்கிப் பயணிக்க கூடிய வகையில் இருக்கும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சுயமாக சிந்தித்து செயல்படுவது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் நிதானத்துடன் நடந்து கொள்வது உத்தமம். தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் செலுத்துங்கள். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு வாகன ரீதியான வீண் விரயங்கள் ஏற்படலாம்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நல்ல பலன்களைக் காணக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் மூத்த நபர்களை அனுசரித்து செல்வது நல்லது. புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதக பலன் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளில் கவனமாக இருப்பது நல்லது. ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து செயலாற்றுவதே உத்தமம். கணவன் மனைவிக்கு இடையே அன்பு வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற விஷயங்களை தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியம் முன்னேற்றம் காணும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்கள் சூழ்நிலைக்கேற்ப நடந்து கொள்வது நல்லது. தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புணர்வு தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் மறைமுக எதிரிகளை எதிர் கொள்வீர்கள். மேலதிகாரிகளிடம் பாராட்டுகள் கிடைக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் அதிகம் பொறுமையுடன் இருப்பது மிகவும் நல்லது. வெளியிட பயணங்களின் போது கவனத்துடன் இருப்பது உத்தமம். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி வாகை சூடுவீர்கள். தொலை தூர இடங்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் இடம், பொருள், ஏவல் பார்த்து நடந்து கொள்வது நல்லது. உடனிருப்பவர்களே உங்களுக்கு எதிராக செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை புதிய பொறுப்புகளை ஒப்படைத்து கவனம் செலுத்துங்கள். புதிய தேடி அலைபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைக்கக்கூடிய விஷயங்களுக்கு சாதகப் பலன்கள் கிடைக்கும். நீண்டநாள் இழுபறியில் இருந்து வந்த பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணம் பல வழிகளிலும் வந்து சேரும். தகுந்த சமயத்தில் நண்பர்களின் மூலம் நன்மைகளும், உதவிகளும் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்ப பொறுப்புகளை அதிகம் சுமக்க வேண்டியிருக்கும். தொழில் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் இருந்து வந்த பகை மாறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை கூடும். வெளியிட பயணங்களின் மூலம் தேவையற்ற அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சக போட்டியாளர்கள் எதிர்த்து போராடுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்வதை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்கள் ஈடுபடாமல் விட்டுக்கொடுத்து செல்வது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெளியிட பயணங்களின் மூலம் புதிய நட்பு வட்டம் விரிவடையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நேர்மறையான சிந்தனைகள் அதிகரித்து காணப்படும்.