மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பணம் தொடர்பான விஷயங்கள் சுமூகமாக இருக்கும். புதிய அனுபவம் பிறக்கும் அற்புத நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எடுத்த காரியங்கள் வெற்றியாகும். பெண்களுக்கு தைரியம் பிறக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு உரிய பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் முன் கோபத்தை குறைத்து பேச்சில் இனிமை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாய் கூடுமானவரை விழிப்புணர்வுடன் செயலாற்றுவது உத்தமம். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் படிப்படியாக குறையும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் எந்த ஒரு விஷயமும் சவாலை எதிர்நோக்கி காத்திருக்கும் சூழ்நிலை நிலவும். சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தொலை தூர இடங்களிலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கொடுக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துவது முன்னேற்றத்தை கொடுக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மற்றவர்களுடைய ஆலோசனையை கேட்டு முடிவெடுப்பது உத்தமம். தந்தைவழி உறவினர்கள் மூலம் ஏற்பட்ட பிரச்சனைகள் மறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிகாரபூர்வ ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மூன்றாம் மனிதர்களை நம்பிப் புதிய பொறுப்புகளை ஒப்படைத்து அதில் கவனம் செலுத்துங்கள். உத்யோகத்தில் சுமூகமான சூழ்நிலை நிலவும். ஆரோக்கியம் மேம்படும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் அரசு வழி காரியங்கள் அனுகூல பலனை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய சிந்தனைக்கு உரிய மதிப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நட்பு வட்டம் மேலும் விரிவடையும். தேவையற்ற விரயங்களை குறைத்துக்கொண்டு சிகரத்தை மேற்கொள்வது நல்லது. சுபகாரியத் தடைகள் விலகி குடும்பத்தில் குதூகலம் காணப்படும். ஆரோக்கியம் சீராகும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் கொடுக்கப்பட்ட புதிய பொறுப்புகளுக்கு உரிய மதிப்பு கொடுத்து நடந்து கொள்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் கூடுமானவரை எதையும் நிதானத்துடன் கையாளுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனநிறைவு ஏற்படும். வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த தடைகளை தாண்டிய வெற்றியைப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு இருந்து வந்த பகைகள் மாறும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுப்பதில் கவனம் தேவை. மேல் அதிகாரிகளுடன் இணக்கம் ஏற்படும். வெளியிட பயணங்களின் போது கவனத்துடன் இருந்து கொள்வது நல்லது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் தீரும். விட்டு சென்ற உறவுகள் மீண்டும் வந்து இணைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சமச்சீரற்ற நிலை ஏற்படும். எனினும் ஒன்றுக்கு பலமுறை சிந்தித்துச் செயலாற்றுவது உத்தமம். ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் குறையும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உடைய ஆதரவு பெருகும் அற்புத நாளாக அமைய இருக்கிறது. உங்களை உதாசீனப்படுத்தி அவர்கள் கூட உங்களை பார்த்து பெருமைப்படும் படி நடந்து கொள்வீர்கள். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் வருமானம் இருக்கும். உத்தியோகத்தில் பலமுறை தோல்வி அடைந்த சில விஷயங்கள் கூட வெற்றி அடையும் வாய்ப்புகள் உண்டு. புதிய பொருட்கள் வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு அமையும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் கூடுதல் பணி சுமை இருப்பதால் டென்ஷன் மற்றும் கவலை இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நண்பர்களுடைய ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் விரையங்கள் ஏற்படும் என்பதால் கூடுமானவரை சிக்கனம் செயலாற்றுவது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைக்கூடும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் வரவை விட செலவு அதிகரிக்கும் நாளாக அமைய இருக்கிறது. வர இருக்கும் செலவுகள் சுப செலவுகளாக மாற்றி அமைப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் முயற்சி தேவை. உங்களுடைய உழைப்பிற்கு ஏற்ற மதிப்பு கிடைக்கவில்லையே என்று போராடுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். ஆரோக்கியம் மேம்படும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் பழைய கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும் அற்புத நாளாக அமைய இருக்கிறது. பணம் பல வழிகளிலும் வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து எதிர்பார்த்த விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மனதில் இருக்கும் குழப்பங்கள் தீரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.