மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நினைத்தது நடக்கும் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் ஒற்றுமைக்கு குறைவிருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சோதனைகள் பல எதிர்த்து போராட வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். நல்ல முடிவுகள் எடுப்பீர்கள்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கடினமான பாதைகளை எதிர்கொள்வீர்கள். முக்கியமான விஷயங்களுக்கு நண்பர்களுடைய ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் சில அற்புதங்களை சந்திப்பீர்கள். எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சமயோசிதமாக எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு அனுகூல பலன் பெறுவீர்கள்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வளர்ச்சிக்கான வாய்ப்பை தரக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நேர்மறையான அணுகுமுறை வாடிக்கையாளர்களை கவர்வதற்கு ஏதுவாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் புதிய குறிக்கோள்கள் கொண்டு செயல்பட இருக்கிறீர்கள். சுபச் செய்திகள் இல்லம் தேடி வரும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய புதிய யோசனைகளுக்கு மற்றவர்களின் ஒத்துழைப்பு கிடைக்க கூடிய வகையில் அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியில் ஒன்று பேசுவதை தவிர்க்க வேண்டும். ரத்தின சுருக்கத்துடன் பேசுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பழைய முடிவுகள் மாற்றிக் கொள்ளக் கூடிய சூழ்நிலை உண்டு.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் சந்திப்பு நிகழும் நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் மேலோங்கி காணப்படும் எனவே கவனம் தேவை. வருவது வரட்டும் என்கிற மனப்போக்கு இருப்பது மன அழுத்தத்தை குறைக்கும். உத்தியோகஸ்தர்கள் புதிய பொறுப்புகளில் இருந்து தப்பிச் செல்வதை தவிர்க்கவும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தேவையற்ற அவதூறுகளை பற்றி கவலைப்படாமல் துணிச்சலாக செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மற்றவர்களுடைய ஒத்துழைப்பு குறைவாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுக்கென தனி இடத்தை பிடிப்பீர்கள்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்மறையான விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எண்ணம் போல் பலன்கள் உண்டு. குறுக்கு வழியை தவிர்ப்பது உத்தமம். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு சூழ்நிலைக்கு ஏற்ப கோபத்தை தவிர்த்து நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பெண்கள் கசப்பான அனுபவங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் சமயோசிதமாக செயல்படுவது உத்தமம்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் குதூகலம் காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே உணர்வு ரீதியான பரிமாற்றங்கள் நிகழும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எடுக்கும் முடிவுகளில் தீர்க்கமான நம்பிக்கை வேண்டும். குழப்பத்தில் எடுக்கும் முடிவு ஆபத்தை கொடுக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எத்தனையோ சிக்கல்களையும் அளிக்கக் கூடிய தன்னம்பிக்கை பிறக்கும். தடைகளைத் தாண்டிய முன்னேற்றமான நாளாக இருக்கிறது. புதிய தொழில் துவங்கும் எண்ணத்தில் இருப்பவர்களுக்கு சாதக பலன் உண்டு. துறைசார் நிபுணர்களின் ஆலோசனையை பெறுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் டென்ஷனை ஏற்படுத்தும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் புதிய பரிணாமத்தில் சிந்திக்க கூடிய அமைப்பாக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும். ஆரோக்கியத்தில் உணவு கட்டுப்பாடு தேவை.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற மனக் கசப்புகளை தவிர்ப்பது நல்லது. வெளியிடங்களில் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்ததை சாதிக்கும் வாய்ப்புகள் அமையும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பலவீனமான தோற்றத்துடன் காணப்படுவீர்கள். முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படும். பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் எண்ணம் மேலோங்கி காணப்படும்.