மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய விஷயங்களில் காலதாமதமான பலன்கள் உண்டாகும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு கவனம் தேவை. வெளியிட பயணங்களின் போது எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது நல்லது. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் தேவை. பொறுமையுடன் இருந்தால் நினைத்தது நடக்கும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் அனுகூலமான பலன்களை பெற இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சாந்தமான மனநிலை இருக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு முயற்சி திருவினையாக்கும். தேவையற்ற வம்பு வழக்குகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தின் மீது அக்கறை தேவை.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நன்மைகளை பெறக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இரக்க சுபாவம் தேவை. முன்பின் தெரியாதவர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வு உண்டாகும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கம் உங்களை குழப்பம் அடையச் செய்யலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்த எதிரிகளின் சூழ்ச்சிகள் முறியடிக்கப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புகழ் உண்டாக கூடிய அற்புதமான அமைப்பு உண்டு. உங்களுடைய திறமைகளை மற்றவர்களிடம் சரிவர வெளிப்படுத்துங்கள்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்துக் காட்டுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தேவை இல்லாத அலைச்சல் காரணமாக உடல் சோர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியம் குறித்த விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வரவை விட செலவு அதிகரிக்கும் என்பதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இது வரை இருந்து வந்த விடை தெரியாத முடிச்சுகள் அவிழும். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எல்லா விஷயங்களிலும் ஆர்வமுடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவி இடையே நட்புறவு தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மறதி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விழிப்புணர்வுடன் செயலாற்றுவது நல்லது. ஆரோக்கிய ரீதியான விஷயங்களில் படிப்படியான முன்னேற்றம் இருக்கும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பெருமையை நீங்கள் எண்ணி மற்றவகள் மெச்சி கொள்ளக் கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொழில் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெளிநாடு மற்றும் வெளியே தொடர்பான விஷயங்களில் அனுகூலமான பலன்கள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையான ஓய்வு தேவை. விடாமுயற்சி உங்களுக்கு நல்ல பலன் கொடுக்கும்.
தனுசு:
தனுஷ் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற தடங்கல்கள் ஏற்பட்டாலும் வெற்றி உங்களுக்குத்தான். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்திக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சேமிப்பின் அருமை புரியும். மனோ பயத்தை குறைத்துக் கொள்வது நல்லது.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் புகழின் உச்சிக்கு செல்ல இருக்கிறீர்கள். பல விமர்சனங்களைத் தாண்டி உங்களுடைய திறமைகளை சரியாக வெளிப்படுத்துவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் முன்னெச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பரிவு ஏற்படும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்ப்பதை விட நல்ல லாபம் கிடைக்கக்கூடிய அனுகூலமான பலன்கள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்பட்டாலும் பணப்புழக்கம் குறையாது. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து சில சாதக மற்ற செய்திகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை காப்பது நல்லது.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் தட்டிப் போக வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளை வளரவிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஓய்வு தேவை.