மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களை தேடி வரக்கூடிய வாய்ப்புகளை தவற விட்டு விடாமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அனுகூல பலன் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும் எனவே கவனம் தேவை.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. உங்களுடைய மன குழப்பங்கள் தீர்ந்து தெளிவான முடிவு எடுக்கக் கூடிய தைரியம் பிறக்கும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் படிப்படியாக குறையும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். தடைப்பட்ட காரியங்கள் நடைபெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பண ரீதியான விஷயத்தில் எச்சரிக்கை தேவை. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகும் வாய்ப்பு உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு தேவை எனவே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் நிதானத்துடன் கையாளுவது நல்லது. மூன்றாம் மனிதர்களை நம்பிப் புதிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மனதில் நினைக்கும் வேண்டுதல் நிறைவேறும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற வீண் விரயங்களை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பாராத திடீர் செலவுகள் வந்து சேரலாம். வாகன ரீதியான பயணங்களின் போது கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் ஏற்றம் காணும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற சன்மானம் கிடைக்கும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடமையிலிருந்து பின் வாங்காமல் இருப்பது நல்லது. தேவையற்ற விமர்சனங்களை தவிர்த்து விட்டு நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள பாடுபடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய பணியில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய உற்சாகத்திற்கு குறைவிருக்காது. நீங்கள் எதை அடைய நினைத்தீர்களோ அதனை அடைந்து விடுவீர்கள். முழு முயற்சியுடன் செயல்படும் பொழுது உங்களுடைய தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். சுய தொழிலில் நீங்கள் அதிக லாபம் காணலாம். வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு விருத்தி உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுமை தேவை.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய விரும்பிய நிகழ்வுகள் விரும்பியவர்களால் நடைபெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரித்தாலும், கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் தடைபடலாம் என்பதால் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நேர்மறையான அணுகுமுறை இருப்பது நல்லது. குறுக்கு வழியில் சென்றால் தேவையற்ற வம்பு வழக்குகள் உண்டாகும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அமோகமான நாளாக அமைய இருக்கிறது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி வாகை சூடுவீர்கள். மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்ளும் யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சுற்றி இருக்கும் எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் வல்லமை திறக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தக்க சமயத்தில் நல்ல நட்பு உண்டாகும். உற்றார், உறவினர்களின் ஆதரவு பெருகும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனதில் நினைக்கும் விஷயம் ஒன்று அப்படியே நடைபெறும் என்பதால் உற்சாகத்திற்கு குறைவிருக்காது. தொழில்முறை போட்டிகள் மேலும் வலுவாக்கும் என்பதால் சாதுர்யத்துடன் செயல்படுவது உத்தமம். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் திருப்பங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். மூன்றாம் மனிதர்களை நம்பி குடும்ப விஷயங்களை பகிராமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இரட்டிப்பு லாபம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை புறக்கணித்து வேலையில் கூடுதல் அக்கறையுடன் இருப்பது நல்லது.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களுடைய ஒத்துழைப்பு கிடைக்கும். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை ஓங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய பதவி உயர்வு குறித்த விஷயத்தில் சாதக பலன் உண்டு.