மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் இருக்க கூடிய முடிவுகளில் கவனத்துடன் இருப்பது நல்லது. தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் உங்கள் வேலையில் மட்டும் கவனமாக இருங்கள். சுயதொழிலில் எதிர்பார்ப்பதை விட இரட்டிப்பு லாபம் உண்டாகும். பயணங்களின் பொழுது எச்சரிக்கை தேவை. பொருளாதாரம் உயரும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் இருக்க கூடிய முடிவுகளுக்கு மற்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்த வாய்ப்புகள் உண்டு. விமர்சனங்களை தாண்டிய முன்னேற்றம் உருவாகும். எதைப் பற்றிய கவலையும் இல்லாமல் நீங்கள் உங்கள் பாதையை நோக்கி பயணிப்பது நல்லது. வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் சாதக பலன் காணக் கூடிய யோகம் உண்டு.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று குழப்ப நிலையில் இருப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் நீங்கள் உங்களுடைய சுய லாபத்தை கருத்தில் கொள்ளாமல் நேர்மையாக நடந்து கொள்வது நல்லது. உத்யோகஸ்தர்களுக்கு அனுகூல பலன் காணப்படும். திறமைக்கு ஏற்ப பொறுப்புகளும் வந்து சேரும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய இரக்க சுபாவம் உங்களை பல வழிகளிலும் நன்மை பெற செய்யும். கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை நீங்களே பேசித் தீர்த்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பின்விளைவுகளை யோசிக்காமல் எந்த ஒரு செயலிலும் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்வதை தவிர்ப்பது நல்லது. நிதானமாக எந்த ஒரு முடிவையும் எடுப்பது உத்தமம். அவசரம் ஆபத்தை தரும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணரீதியான விஷயத்தில் கால தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை. அனாவசிய பிரச்சனைகளை தவிர்ப்பது நல்லது.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சண்டை, சச்சரவுகளைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் வேலையில் கூடுதல் அக்கறை காணப்படும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். சுயலாபம் தவிர்த்து வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்யோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் அமைதி காப்பது நல்லது.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சிறு சிறு விஷயங்களை பெரிது படுத்தாமல் விட்டு கொடுத்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வரவேண்டிய இடத்தில் இருந்து வரவேண்டிய பணம் வந்துசேரும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்டநாள் இழுபறியில் இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரக்கூடும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஒன்று நினைக்க, அது ஒன்று நடக்கும். எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. கணவன் மனைவி இடையே புரிதல் தேவை. தேவையற்ற சந்தேகங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு வெளியிடங்களில் அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். உங்கள் எதிர்பார்ப்புக்கு மீறிய அனுகூல பலன் காண போகிறீர்கள். தொட்டதெல்லாம் பொன்னாகும் அற்புத நாளாக இருக்கும். விட்டு சென்ற உறவுகள் உங்களைத் தேடி தாங்களாகவே வந்து சேருவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணம் கை நிறைய வரும். உத்தியோகஸ்தர்களுக்கு பெருமை உண்டாகும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனம் மகிழும் படியான நிகழ்வுகள் நடைபெறும். குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். சகோதரத்துவத்தில் ஒற்றுமை பலப்படும். தகுந்த சமயத்தில் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு அனுகூல பலன் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியிடங்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும். ஆரோக்கியம் சீராகும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் கூடும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் இழுபறி ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை விட லாபம் இரட்டிப்பாக காண முடியும். உங்களுடைய விடாப்பிடியான முயற்சிகள் வெற்றி பாதையை நோக்கி பயணிக்க செய்யும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் துணிச்சலாக செயல்படுத்தக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த பனிப்போர் நீங்கும். நீங்கள் ஏங்கிக் கொண்டிருந்த ஒரு விஷயம் உங்கள் கைகள் தானாக வந்து சேரும். பொருள் சேர்க்கை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் அதிக ஈடுபாடு ஏற்படும்.