மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்துடன் செலவிடக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தங்களுடைய பணியில் கூடுதல் பொறுப்புடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் நடைபெறும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தெய்வீக காரியங்களில் ஈடுபடக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தங்களுடைய தொழில் முன்னேற்றம் குறித்த எண்ணம் மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேல் அதிகாரிகளுடன் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். தெய்வீக சிந்தனைகள் மேலோங்கும். கணவன் மனைவி இடையே பரஸ்பர ஒற்றுமை நீடிக்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்ப்புகள் அடங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லை தீரும். வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம் எனவே கவனத்துடன் இருப்பது நல்லது.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் குடும்பத் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்வீர்கள். சகோதர சகோதரிகளுக்கும் இருந்து வந்த மனக் கசப்புகள் தீரும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வெளியிட தயங்கும் போது கூடுதல் கவனத்துடன் செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் கொடுக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்து காட்ட கூடிய தைரியம் பிறக்கும் நல்ல நாளாக அமைய இருக்கிறது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி வாகை சூடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்க்கும் பணவரவு இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தேவையற்ற வம்பு வழக்குகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஆன்மீக ரீதியான சுமைகள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். கணவன் மனைவியிடையே இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய சிந்தனைகள் மேலோங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும் இதனால் டென்சன் காணப்படும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கடமையில் இருந்து அந்த தொய்வு நிலை நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும். இறை வழிபாடுகளில் அதிக ஆர்வம் செலுத்துவார்கள். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் அடையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. யாரையும் எளிதில் நம்பி விடாமல் இருப்பது உத்தமம்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கலாம். தேவையற்ற எதிர்பார்ப்புகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இறை வழிபாட்டின் மீது ஆர்வம் அதிகரிக்கும். பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்க்கும் லாபம் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள முனைவீர்கள். ஆரோக்கியம் சீராகும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். வாகன ரீதியான விரயங்களை சந்திக்கலாம் என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வருமானம் அதிகரித்தாலும் தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. சுவாசப் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பாராத விஷயம் ஒன்று நடக்க இருக்கிறது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தங்களுடைய நேர்மையின் காரணமாக அனுகூல பலன்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் பணிகளில் மேன்மை காண்பீர்கள். கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் குறையும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்துடன் செலவிடக் கூடிய நல்ல அமைப்பாக அமைந்திருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பணம் பல வழிகளிலும் வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வு காணப்படும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சாதகப்பலன் உண்டாகும். வெளியிட பயணங்களின் போது கவனம் தேவை. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.