மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. குலம் தலைக்க குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது சிறப்பு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இறைவழிபாடு அற்புத ஆற்றலை கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய எண்ணங்கள் நேர்மறையாக செயல்படும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறப்பான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எத்தகைய தடைகள் அகன்று வெற்றி மேல் வெற்றி உண்டாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும் அற்புத நாளாக இருக்கும். மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்வதற்கான நல்ல அறிகுறிகள் தோன்றும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்துக் காட்டுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்துடன் செலவிடக் கூடிய நேரமாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிலும் வெற்றி வாழ்க்கை வாய்ப்பைத் தேடி அலைந்து கொண்டிருக்கும் உங்களுக்கு இனிய செய்திகள் கிடைக்கும். கணவன் மனைவி பிரச்சனைகள் தீரும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் நன்மைகள் நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு லாபம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய மன நிலை சிறப்பாக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கப் பெறும். குடும்பத்தில் இருக்கும் சண்டை சச்சரவுகளை நீக்கி குடும்பத்தில் முன்னேற்றம் உண்டாக கூடுமானவரை அமைதி காப்பது நல்லது.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் தீரும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரிய தொகையை ஈடுபடுத்தி அதிக லாபம் காண்பீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சிந்தனை மேலோங்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் உடைய ஆசைகள் நிறைவேறும். பெண்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். வேண்டியது கிடைக்கும் அற்புத நாள்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் பொருளாதார ரீதியான முன்னேற்றத்தை காண இருக்கிறீர்கள். எதிர்பார்க்கும் அளவிற்கு பணம் பல வழிகளிலும் வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் கூடுதல் பணியாளர்களை அமர்த்தி அழகு பார்ப்பார்கள். குடும்பத்தில் அமைதி நிலவ இறைவழிபாடு அவசியம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டநாள் பிரச்சனைகள் தீரும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் பெரிய தொகையை ஈடுபடுத்தும் போது கவனமுடனிருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய மனதிலிருக்கும் கேள்விகளுக்கான விடை கிடைக்கும். கணவன் மனைவி உறவு சிக்கல் நீங்கி அன்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட சிறப்பாக அமைய இருக்கிறது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகள் கைகூடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மனதில் உற்சாகம் பிறக்கும். நண்பர்களுடைய ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். குடும்பத்தில் அமைதி குறைவிருக்காது.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்க்கும் அளவிற்கு லாபம் பன்மடங்கு பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் ஏற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உற்சாகத்துடன் செயல்பட கூடிய நல்ல நாளாக இருக்கும். சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். கணவன் மனைவிக்கு இடையே அன்பையும் தாண்டிய நட்பு உருவாகும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடந்து கொள்ள முயற்சி செய்வீர்கள்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்சாகம் உங்களையும் உங்களை சார்ந்தவர்களையும் தொற்றிக் கொள்ளும் அளவிற்கு அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வேலைச்சுமை அதிகரித்தாலும் மனதில் தன்னம்பிக்கை பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத டென்ஷன் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்பதால் கூடுமான வரை பொறுமை காப்பது நல்லது.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி ஒருவருடன் ஒருவர் ஒற்றுமையாக இருப்பீர்கள். மனதிலிருக்கும் மனக்கசப்புகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்காலுக்கு உங்கள் திறமைகளை வெளிக் கொணர அற்புதமான சந்தர்ப்பங்கள் அமையும். உத்யோகத்தில் இருப்பவர்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் பாக்கியம் உண்டாகும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் பேச்சாற்றல் மற்றவர்களை எளிதில் கவரும் வண்ணம் அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமாக வழிபடுவதன் மூலமும் முன்னேற்றத்தை காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பனிபோல் நீங்கி அன்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்