மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் புதிய கனவுகள் நிறைவேற கூடிய நல்ல நாளாக இருக்கிறது. சுயதொழில் செய்பவர்கள் அதிகாரத்தில் ஈடுபடுவீர்கள். வியாபாரம் விருத்தி அடையும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை கூடும். தேவையில்லாத சிந்தனைகளை தவிர்க்கவும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் இருக்க கூடிய முடிவுகளுக்கு மற்றவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கலாம். கணவன் மனைவிக்குள் சிறுசிறு வாக்குவாதங்கள் வந்து மறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை நிலவும். கணக்கு வழக்குகளில் கவனம் செலுத்துங்கள்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூல பலன் தரக்கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். உத்யோகஸ்தர்கள் வேலையில் முழு கவனம் செலுத்துவது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்ப்பதை பூர்த்தி செய்யக்கூடிய சிறந்த நாளாக அமைய இருக்கிறது. விட்டுச்சென்ற பழைய விஷயங்கள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிம்மதி இருக்கும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பல எதிர்ப்புகள் அடங்கும் இனிய நாளாக அமைய இருக்கிறது. சுபகாரியத் தடைகள் விலகி ஒற்றுமை மேலோங்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் காணலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுமை தேவை.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் அமைதியைக் கடைபிடிப்பது மிகவும் நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அமோகமாக இருக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு உடல் வலி நீடிக்கும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துடிப்பாக செயல்படக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. ஆரோக்கியத்தில் இருந்து வந்த பாதிப்புகள் குறையும். கணவன் மனைவி ஒற்றுமைக்கு குறைவிருக்காது. சுபகாரியத் தடைகள் நீடிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சுறுசுறுப்பு இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மற்றவர்கள் மனதை எளிதாக கவர்வீர்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. வீண் ஆசை விபரீத முடிவுகளை கொடுக்கும். கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை வெளியே பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. சுப காரிய தடைகள் தொடர்ந்து நீடிக்கும். பொறுமை காப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வெளியிட பயணங்களின் போது கவனம் தேவை. தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைப்பதை தவிர்க்கவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். உத்யோகத்தில் உள்ளவர்கள் முன்கோபம் தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எத்தகைய தடைகளையும் தகர்த்தெறிந்து வீர நடை போடுவீர்கள். குடும்பத்தில் இருக்கும் சிலர் உங்களை புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள். தொலைதூர நண்பர்களை சந்திப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய அணுகுமுறையை மற்றவர்களை கவரும் வண்ணம் அமையும். வேலையில் கவனமாக இருப்பது நல்லது.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கூடுதல் பொறுப்புகளை சுமக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமையில் குறைவிருக்காது. வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய உத்திகளை கையாளும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் சமயோசிதமாகச் சிந்தித்து செயல்படுவது நல்லது. திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. உங்களுடைய திறமையை வெளிக்கொணர கூடிய வாய்ப்பாக அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக போட்டியாளர்கள் வலுவாகும்.