மேஷம்:
மேஷ ராசியில் பிறந்த நீங்கள் இந்த நாளில் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நினைத்ததை நடத்தி காட்டுவதில் இடையூறுகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன உளைச்சலில் காணப்படுவார்கள். தேவையற்ற சிந்தனைகளை தவிர்த்து மனதை ஒருமுகப்படுத்த முயற்சி செய்தால் நற்பலன் உண்டாகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்த நீங்கள் இந்த நாளில் எதிர்பார்க்கும் சில விஷயங்கள் தடை தாமதங்கள் பின் வெற்றி அடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அனுகூல பலன் பெற விடா முயற்சியை கொடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தாலும் ஆர்வத்துடன் இருப்பீர்கள். வரவைக் காட்டிலும் செலவு அதிகமாக இருக்கும் என்பதால் சிக்கனத்தை கடைபிடிப்பது உத்தமம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்த நீங்கள் இந்த நாளில் நினைத்ததை சாதித்து காட்ட வேண்டும் என்கிற உத்வேகம் இருக்கும். தொழில் மற்றும் வியாபார முயற்சிகளில் அனுகூலப் பலனை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் இருந்த பழைய வேலைகள் எல்லாம் முடிவுக்கு வரும். உங்கள் மதிப்பும், மரியாதையும் குடும்பத்தின் உயர்வதற்கான வாய்ப்புகள் அமையும். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வது உத்தமம்.
கடகம்:
கடக ராசியில் பிறந்த நீங்கள் இந்த நாளில் எதிர்பார்க்காத சில விஷயங்களை எல்லாம் பார்க்கப் போகிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் உழைப்பிற்கு உரிய பலன் கிடைக்கும் அற்புத நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் விட்டு சென்ற உறவுகளை நினைத்து வருந்தி கொண்டிருக்காமல் வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. ஆரோக்கியம் சீராக இருக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்த நீங்கள் இந்த நாளில் நீங்கள் நினைத்து கூட பார்க்காத சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான தொலைதூர போக்குவரத்துகளை தவிர்ப்பது உத்தமம். வெளியிடங்களில் உடைமை மீது கவனம் தேவை. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் பணவரவு இருக்கும். கடன் பிரச்சினைகள் குறைவதற்கான வாய்ப்புகள் அமையும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்த நீங்கள் இன்றைய நாளில் பல்வேறு நன்மைகளை பெற போகிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு உரிய இடங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. நிலுவையில் நின்று போன சில பணிகள் மீண்டும் எடுத்து செய்வீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்த நீங்கள் இன்றைய நாளில் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்வதை தவிர்த்து ஒன்றுக்கு இரண்டு முறை சிந்திப்பது நல்லது. சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்ப்பதை விட லாபம் பன்மடங்கு பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் ஏற்பட்டு அவர்கள் மூலம் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அமையும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் படிப்படியாக சீராகும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்த நீங்கள் இன்றைய நாளில் செய்யக்கூடிய விஷயங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு விமர்சனங்களை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை பிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எவ்வளவு இடையூறுகளை வந்தாலும் அதனை தகர்த்து எறிந்து வெற்றி நடைபோடுவீர்கள். வீண் விரையங்கள் ஏற்படாமலிருக்க ஆரோக்கியத்தை அக்கறையுடன் பார்த்து கொள்வது நல்லது.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்த நீங்கள் இன்றைய நாளில் எடுக்கும் முடிவுகள் சாதகமான பலன்களைக் கொடுக்கும் அற்புத நாளாக அமைய இருக்கிறது. தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் மற்றும் டென்ஷன் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பொருளாதார ஏற்ற இறக்கங்களை சமாளிக்கும் தைரியம் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
மகரம்:
மகர ராசியில் பிறந்த நீங்கள் இன்றைய நாளில் தொடங்கக்கூடிய விஷயங்கள் எதிர்காலத்திற்கு நன்மைகளை பயக்கும் வண்ணம் அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் புதிய வேலை ஆட்களை நியமிக்கும் எண்ணத்தில் இருப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களுடைய ஆதரவை பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே இருக்கும் அன்பில் புதிய புலிகள் உண்டாகும். ஆரோக்கியம் மேம்படும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்த நீங்கள் இன்றைய நாளில் எதற்கு எடுத்தாலும் கோபப்படுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் வெளியிடங்களில் மௌனம் காப்பது உத்தமம். மூன்றாம் நபர்களுடைய பிரச்சனைகளில் தலையிடுவது ஆபத்தைக் கொண்டு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட விஷயங்களை செய்யாமல் ஒரு விஷயத்தில் முழு கவனம் செலுத்துவது நல்லது. ஆரோக்கியம் சிறக்கும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்த நீங்கள் இன்றைய நாளில் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் செலவழிப்பீர்கள். வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் கணவன்-மனைவிக்கிடையே நல்லுறவு மேம்படும். படிக்கும் மாணவர்கள் நன்றாகப் படிப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் வருமானம் இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் உடைய கனவுகள் நிறைவேறும். விட்டு சென்ற உறவுகள் தேடி வருவார்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும்.