மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புதம் நிறைந்த நல்ல பலன்களைக் கொடுக்கக் கூடிய நாளாக அமைய இருக்கிறது. சுய தொழிலில் லாபம் காணலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய நாளாக இருக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாளாகவே இருக்கிறது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவி உறவு சிக்கல் மேலும் வலுவாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் கைகூடிவரும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வெளியிட பயணங்களின் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்வது நல்லது.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். புதிய நபர்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் செலுத்தவும். சுய தொழிலில் லாபம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்கள் பணியில் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. கணவன் மனைவி பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியம் சிறக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முக்கிய முடிவுகளை எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. சுய தொழிலில் இருப்பவர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லை அதிகரிக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நண்பர்களுடன் ஒற்றுமையாக செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கும் முடிவுகள் சாதக பலன்களை கொடுக்க இருக்கிறது. திருமண சுபகாரிய முயற்சிகளில் வெற்றி வாய்ப்புகளை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் புதிய பணியாளர்களை நியமிப்பதில் கவனம் செலுத்துவது நல்லது.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தங்கள் முன்கோபத்தை குறைத்துக் கொள்வதன் மூலம் மன அமைதி காணலாம். குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கும். எடுக்கும் முடிவுகளில் கவனம் தேவை. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எந்த ஒரு முடிவுகளையும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு காரணமாக சோர்வுடன் காணப்படுவார்கள். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சமூக அக்கறை அதிகரிக்கும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பெரிய தொகையை செலுத்தி அதிக லாபம் காணும் யோகமுண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் பணியில் கூடுதல் அக்கறையுடன் செயல்படுவீர்கள். கணவன் மனைவி இடையே பேச்சு வார்த்தையில் கவனம் தேவை.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல பலன்களை தரக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தங்கள் பணியில் திருப்தி கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தங்கள் மேல் அதிகாரிகளுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து கொள்வது நல்லது. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீர்ந்து மன அமைதி இருக்கும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர வேண்டும் என்கிற எண்ணத்தில் மேலோங்கி காணப்படுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் வேலைகளை குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக இருக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மந்த நிலை காணப்பட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்கள் பணியில் கவன சிதறல் ஏற்படும் என்பதால் விழிப்புணர்வுடன் செல்வது நல்லது.