மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எந்த ஒரு முக்கிய விஷயத்திலும் அவசரப்படாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சினைகளை பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வெளியிட பயணங்கள் லாபகரமானதாக இருக்கப் போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தள்ளிப்போன காரியங்கள் நடக்கப் போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும் இதனால் எத்தகைய தடைகளையும் தகர்த்து எறிந்து போராடுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளுங்கள்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் தேவையற்ற இடங்களுக்கு பயணம் செய்வதை தவிர்க்கவும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் ஒப்படைக்கும் விஷயங்களில் கவனம் தேவை. முன்பின் தெரியாதவர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திட்டமிட்ட காரியங்கள் சிதறாமல் நடக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற பகைமையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது மன அமைதிக்கு வழி வகுக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பகைவர்கள் தொல்லை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு என்பதால் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. உபயோகத்தில் உள்ளவர்கள் அடுத்தவர்களை பற்றி விமர்சனம் செய்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்க தொடங்கும். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியை கொடுக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் புதிய விஷயங்களில் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முக்கிய பொறுப்புகள் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. இதுவரை அலட்சியமாக இருந்த நீங்கள் இனி விழித்துக் கொள்ள வேண்டிய காலமாக இருக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் உண்டு என்பதால் எதிலும் முன்வைத்த காலை பின் வைக்காமல் இருங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய சலுகைகள் கிடைக்கும். அரசு வழி காரியங்கள் அணுகூல பலன் தரும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்துடன் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் மன ரீதியான போராட்டம் குறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு அதிகார பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சில வேலை நுணுக்கங்கள் தெரிய வர வாய்ப்புகள் உண்டு.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அடிப்படை வசதிகளை உயர்த்திக் கொள்வீர்கள். பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமையப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் வேண்டிய வேண்டுதல் நிறைவேற கூடிய அற்புதமான அமைப்பாக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் புதுமையை படைக்கக்கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற அலைச்சல் ஏற்படக்கூடும் என்பதால் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். மூத்த சகோதரர்கள் வழியில் ஆதாயம் காணலாம். சுப காரியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வருமானம் பெருகக் கூடிய அமைப்பு உண்டு.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உழைப்பால் உயரக்கூடிய இனிய நாளாக இருக்கிறது. தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தேவையற்ற பயணங்கள் விரயத்தை கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் புது பொலிவுடன் காணப்படுவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்ப ரீதியான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திருப்தியைகரமான சூழ்நிலை நிலவும். வாடிக்கையாளர்களின் நன்மதிப்பு பெறுவீர்கள். உபயோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் நட்பு மேலும் இணக்கம் தரும். கேட்ட இடத்திலிருந்து பணம் வருவதற்கு கால தாமதம் ஆகலாம் எனவே பொறுமை தேவை. ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் மன உளைச்சலை கொடுக்கலாம். தேவையற்ற வாக்குவாதங்களை வெளியிடங்களில் தவிர்த்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவி இடையே பேச்சில் இனிமை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகிப்பு தன்மை தேவை. சுயதொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதில் கவனம் செலுத்துங்கள். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் இருக்கும்.