மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத நல்ல பலன்களைக் கொடுக்கக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் மூலம் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் மேலும் நெருங்கி பழகுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திருப்பம் ஆச்சரியப்பட வைக்கும். தொட்டதெல்லாம் துலங்கும் அற்புத நாளாக இருப்பதால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் வருமானம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்கும். ஆரோக்யத்தில் கூடுதல் அக்கறை செலுத்துங்கள்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாளாக அமைகிறது. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து இறை வழிபாடுகளில் நாட்டம் செலுத்துவது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும். சுய தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு ஏற்றம் தரக்கூடிய நாளாக இருக்கிறது. உத்தியோகஸ்தர்கள் பணியில் கூடுதல் அக்கறை செலுத்துவீர்கள்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொருளாதார ரீதியான முன்னேற்றம் காணக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். கணவன்-மனைவியிடையே பரஸ்பர புரிதல் உண்டாகும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் அனுசரித்து செல்வது நல்லது.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றம் தரும் அமைப்பாக இருக்கிறது. வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தேவையற்ற சுமைகளை இழுத்துப் போட்டுக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. உடல்நலத்தில் அக்கறை தேவை. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு முயற்சி திருவினையாக்கும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்துக் காட்ட கூடிய தைரியம் பிறக்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பண ரீதியான விஷயங்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வாக்கு சுத்தம் இருக்க வேண்டும். யோசிக்காமல் வாக்குகளை கொடுத்துவிட்டு பின்னர் அவதி பட கூடாது. எதையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு தடைகளைத் தாண்டிய முன்னேற்றம் இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி வாகை சூடுவீர்கள். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய உத்வேகத்துடன் செயல்பட கூடிய இனிய நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய பிடிவாதத்தை தளர்த்திக் கொள்வது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அதிரடி மாற்றங்கள் ஏற்படலாம். மறைமுக எதிரிகளின் தொல்லை வலுவாகும் என்பதால் விழிப்புடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு நேர்மறையான சிந்தனைகள் அதிகரித்துக் காணப்படும். எதிர்காலம் பற்றிய கவலைகள் நீங்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உற்சாகம் தரும் அமைப்பாக இருக்கிறது. வெளியிட பயணங்கள் மூலம் அனுகூல பலன் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வாய்ப்புகள் உண்டு.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும் நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நட்பு வட்டம் விரிவடையும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேற கூடிய வாய்ப்புகள் உண்டு. பெண்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பண ரீதியான விஷயத்தில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் லாபம் தரும் அமைப்பாக இருப்பதால் உற்சாகத்திற்கு குறைவிருக்காது. கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் பெருகும். சுயதொழில் மற்றும் வியாபாரிகளுக்கு மக்களிடையே நன்மதிப்பும் உண்டாகும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை நுணுக்கம் கற்றுக் கொள்ளும் யோகம் உண்டு.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துணிச்சலுடன் சில விஷயங்களை செய்ய முனைவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் சுய முடிவு எடுப்பது நல்லது. தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். தேவையற்ற விஷயங்களுக்காக வாதிடுவதை தவிர்ப்பது இருப்பது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி கொடுக்கும்.