மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் தரும் நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் தனவரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிம்மதி குறைவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே கவனம் தேவை. ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பாராத வகையில் நண்பர் ஒருவரை சந்திக்க இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்ததை சாதித்துக் காட்டும் யோகம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம் குறித்த விஷயங்களில் சாதக பலன் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை தேவை.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். தொட்டதெல்லாம் துலங்க கூடிய நல்ல நாள் என்பதால் வீட்டுத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேளையில் தொழில்முறை போட்டிகள் அதிகரிக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்க கூடிய முடிவுகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு நீங்கள் மனதில் நினைப்பது ஒன்று, நடப்பது ஒன்றாக இருக்கும் என்பதால் தேவையற்ற எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஆரோக்கிய ரீதியாக சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும் என்பதால் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சனைகள் வலுவாகும் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் இருந்து வந்த இடையூறுகள் விலகும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடமையில் கூடுதல் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் வெளியிடங்களில் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவு ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு அதிக பொறுமை தேவை. வார்த்தையில் இனிமையுடன் இருப்பது நல்லது.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய துணிச்சலான முடிவுகள் மற்றவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தும். எடுக்கக்கூடிய முடிவுகளில் இருந்து பின் வாங்காமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மந்த நிலை காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் தேவை. தேவையற்ற சண்டை சச்சரவுகளைத் தவிர்க்கவும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முக்கிய முடிவுகள் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. துறைசார் நிபுணர்களின் ஆலோசனை பெறுவது நல்லது. தொழில் ரீதியான போட்டிகள் வலுவாகும் என்பதால் கவனம் தேவை. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். உத்தியோகஸ்தர்களுக்கு மனக்குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வகையில் தனலாபம் ஏற்படும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வெளியிட பயணங்கள் மூலம் அனுகூல பலன் உண்டு. புதிய நண்பர்களின் சேர்க்கை லாபம் தரும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனம் மகிழும் படியான நல்ல நிகழ்வுகள் நடைபெறும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி காணும் யோகம் உண்டு. கணவன் மனைவியிடையே ஒற்றுமையில் குறைவு இருக்காது எனினும் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இதுவரை இருந்து வந்த போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கூடுதல் ஒத்துழைப்பு தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு நன்மைகள் உண்டு.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்ப வாழ்க்கையில் இருந்து வந்த சிக்கல்களுக்கு விடை கிடைக்கும். வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வகையில் பொருட் சேர்க்கை ஏற்படும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். உத்தியோகஸ்தர்களுக்கு வெளியிட பயணங்கள் மூலம் வீண் அலைச்சல் ஏற்படலாம்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கற்பனைத் திறன் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. எடுக்கக் கூடிய முடிவுகளுக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும் என்பதால் கூடுதல் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிதானம் தேவை.