மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் அதிகம் பொறுமையுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் அக்கறை கொள்ளுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பண நெருக்கடி ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
ரிஷபம் :
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான அமைப்பு என்பதால் நீங்கள் தொட்டதெல்லாம் ஜெயமாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உங்களுடைய நேர்மறையான சிந்தனை மற்றவர்களையும் தொற்றிக் கொள்ளும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் முழு ஈடுபாட்டுடன் ஈடுபடுவீர்கள்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய புதிய தொழில் முயற்சிக்கு நல்ல வரவேற்பு காத்திருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சமூகத்தின் மீதான அக்கறை மாறுபடும். கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை மற்றவர்களிடத்தில் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. சுய மதிப்பீடு செய்யும் வாய்ப்பு அமையும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பல சாதனைகள் புரிய கூடிய நல்ல வாய்ப்புகள் அமையும். கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு காலதாமதமான பலன்கள் கிடைக்க இருக்கும் என்பதால் பொறுமை அவசியம் ஆகும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பேச்சு வார்த்தையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தில் மூத்தவர்களை அனுசரித்து செல்வீர்கள். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொதுநல அக்கறை அதிகரித்து காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நடவடிக்கை வித்தியாசமாக பலருக்கு தோற்றமளிக்கலாம். சுயசிந்தனை அதிகரித்து காணப்படும். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு சரியான தருணங்கள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் போக்குவரத்து தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நேர்மறையான அணுகுமுறை அனுகூலமான பலன்களை கொடுக்க இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகளை சந்திக்க நேரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன் மனைவி ஒற்றுமையில் குறைவில்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிந்தனை அனுகூலமான பலன்களை கொடுக்கும். நீங்கள் நினைத்தது நினைத்தபடி நடக்கும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பங்குதாரர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் அகலும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை கூடும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் நிறைவேறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு துறைசார் நிபுணர்களின் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் மனம்விட்டுப் பேசுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராகும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். தேவையற்ற வெளியிட பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அதிக பொறுமை தேவை. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யக்கூடாது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சுற்றியிருப்பவர்கள் உடைய சுய முகத்தை பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பாராத வகையில் பணவரவை பார்க்க இருக்கிறீர்கள். பணம் பல வழிகளிலும் வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய உத்திகள் கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளைத் தவிர்ப்பதும் நல்லது. வேலையில் கவனம் தேவை.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிந்தனை தெளிவாக இருக்கும். பெரிய குழப்பத்தில் இருந்து மீள இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணியாளர்களுடன் இணக்கமாக செல்லும் சூழ்நிலை உண்டு. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளுடன் நட்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும்.