மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பாராத நபர்களை சந்திக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தொலை தூர இடங்களில் இருந்து கிடைக்கக்கூடிய செய்திகள் உங்களுக்கு சாதகமாக அமையும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு கடமையில் கூடுதல் பொறுப்பு தேவை.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. தொலை தூர பிரயாணங்களை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தேவையற்ற விஷயங்களில் வாக்குவாதங்களை தவிர்த்து நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிலும் வெற்றி நிச்சயம்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தன்னம்பிக்கையை உங்களுக்கு துணையாக அமைய இருக்கிறது. மறைமுக எதிரிகளை வென்று காட்டுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எவ்வளவு தடைகள் வந்தாலும் எதிர்த்துப் போராடும் ஆற்றல் பிறக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்த விஷயங்கள் நடக்கும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு இறை வழிபாட்டில் அதிக ஆர்வம் இருக்கும். பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். சுப காரிய முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் அகலும். கணவன் மனைவி ஒற்றுமையில் சிறுசிறு ஊடல்கள் வந்து செல்லும். யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது. சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கவனம் தேவை.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சீரும் சிங்கமாக செயல்பட இருக்கிறீர்கள். வம்புக்கு செல்லாத நீங்கள் வந்த சண்டையை விட போவது இல்லை. கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகளை தட்டிப் போகக் கூடிய அமைப்பாக இருப்பதால் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முன்கோபம் தவிர்ப்பது நல்லது.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளுக்கு உங்களுடைய குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்க இருக்கிறது. தேவையற்ற விமர்சனங்களை தூக்கி எறிந்துவிட்டு உங்கள் பாதையை நோக்கி பயணியுங்கள். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் மனக்கசப்புகள் நீங்கும். சுயதொழிலில் எதிர்பார்ப்பதை விட லாபம் பன்மடங்கு உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை கூடும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எத்தகைய முயற்சியையும் விடாப்பிடியாக செய்து காட்டி வெற்றி பெறுவீர்கள். மற்றவர்கள் பாராட்டும் படியான நிகழ்வுகள் நடைபெறும். தொலை தூர இடங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை. சுய தொழிலில் எதிர்பாராத திருப்பம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் விரும்பிய விஷயங்களை அடைவதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன்-மனைவி இடையே அன்னியோன்யம் கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்கள் மேலும் வலுவாக கூடும். விடாப்பிடியான முயற்சி தேவை.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் முன்னேற்றத்தை நோக்கி பயணிக்க இருக்கிறீர்கள். தொலை தூர இடங்களில் இருந்து கிடைக்கக்கூடிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மேலும் வலுவாக கூடும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நலம் தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு டென்ஷன் காணப்படும். உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் சாதகமான பலன்களைக் காண இருக்கிறீர்கள். தொட்டதெல்லாம் பொன்னாகும் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தடைப்பட்டுக் கொண்டிருந்த வேலைகள் முடிவுக்கு வரும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சி சாதக பலன் கொடுக்கும். பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருப்பதால் வீட்டு தேவைகள் எளிதாக பூர்த்தி செய்து விடுவீர்கள். ஆரோக்கியம் சீராகும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கூடுதல் பொறுமையுடன் இருப்பது நல்லது. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவு எடுக்காமல் ஆறப் போடுவது உசிதமானது. கணவன் மனைவி ஒற்றுமையில் குறைவிருக்காது. தொலைதூர இடங்களில் நடந்து புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புகள் அமையும். முன்பின் தெரியாதவர்களின் அறிமுகம் தவிர்ப்பது நல்லது.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்தது நடக்க கூடிய சந்தர்ப்பங்கள் குறைவாக இருப்பதால் தேவையற்ற எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. மனைவி இடையே விட்டுக் கொடுத்தல் நலம் தரும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். சுபகாரிய முயற்சிகளில் தொடர்ந்து தடை ஏற்படலாம். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் மனம் மகிழும் படியான நிகழ்வுகள் நடைபெறும்.