மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தின் ஆதரவு கிடைக்கக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனமுடனிருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய கை ஓங்கி எடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் காணப்படுவீர்கள். கணவன் மனைவி பிரச்சனைகள் நீங்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு பெரிய மனிதர்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு மற்றவர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவதில் ஏற்றம் காணலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சகோதர சகோதரிகளுக்கு உறுதுணையாக இருப்பது நல்லது. பொருளாதார ரீதியான விஷயத்தில் ஏற்றம் காண்பீர்கள்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மற்றவர்கள் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்டு அனைவரையும் கவர்வதற்கான சூழ்நிலை காணப்படுகிறது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய சிந்தனைகள் மேலோங்கி காணப்படலாம்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய புதிய பாதையை நோக்கிய பயணத்தில் இடையூறுகள் ஏற்படலாம் என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயத்திற்கு குரல் கொடுப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவையற்ற விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியம் பலப்படும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கொடுத்த பணத்தை வசூலிக்க நல்ல நாளாக அமைய இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எந்த சூழ்ச்சிகளையும் முறியடிக்கும் திறன் பிறக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் புதிய சாதனைகளை படைத்து மற்றவர்கள் முன்னிலையில் மதிப்புடன் நடத்தப்படுவீர்கள். கணவன் மனைவி இடையே இருந்த பனிப்போர் நீங்கும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற சிந்தனைகளில் இருந்து மனதை ஒருமுகப்படுத்துவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாவதில் இடையூறுகள் ஏற்படலாம். சுய தொழிலில் நீங்கள் அலட்சியம் இல்லாமல் கவனமுடனிருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலையின் மீது கவனம் தேவை. ஆரோக்கியம் சீராகி வரும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கக் கூடிய அற்புத அமைப்பு உள்ளது. சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்க்கும் விஷயங்களில் காலதாமதமான பலன் கிடைக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு ஆன்மிக நாட்டம் அதிகரித்து காணப்படும். கணவன் மனைவி இடையே நடக்கும் பிரச்சனைகளை வெளியிடங்களில் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது உத்தமம்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் மகிழ்ச்சி பொங்க கூடிய அற்புதமான அமைப்பாக உள்ளது. சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தேவையற்ற பயணங்கள் மூலம் தேவையான உபாயம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இரட்டிப்பு வருமானம் வரக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அதிருப்தி ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்த விஷயங்கள் நினைத்தபடி நடக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடித்துக் காட்ட கூடிய வாய்ப்பாக உள்ளது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அதிரடி மாற்றங்கள் மூலம் ஏற்றம் பெறலாம். பொருளாதார ரீதியான உயர்வு ஏற்படும் என்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கிடைக்க வேண்டிய இடத்தில் இருந்து கிடைக்க வேண்டிய தொகை கிடைக்கும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் அனுபவ அறிவை வெளிப்படுத்தக் கூடிய நாளாகும். சாமர்த்தியமாக செயல்படுவதன் மூலம் ஏற்றம் காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வதற்கு வாய்ப்புகள் அமையும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் நிச்சயம் இருக்கும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கணவன் மனைவி இடையே இருந்து வந்த சிறுசிறு சண்டை சச்சரவுகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தேவையற்ற பகைகள் ஏற்படும் என்பதால் கூடுமானவரை வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கடினமாக இன்னும் உங்களுடைய ஒத்துழைப்பை கொடுப்பது நல்லது.