மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கிறது. தேவையற்ற எதிர்பார்ப்புகளை தவிர்த்துக் கொள்ளுங்கள். சுய தொழிலில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவீர்கள். சுவாச பிரச்சனைகள் ஏற்படும் கவனம் தேவை.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அமோகமான நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சனைகளை மேலும் பெரிதாக்காமல் இருப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் நீங்கும். சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஓய்வு கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்க போகிறது. தேவையற்ற கடன்களில் மாட்டிக் கொள்ள வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்கள் பொறுமையுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் நடக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகளை பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் எதையும் முற்போக்கு சிந்தனையுடன் பார்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கப் போகிறது. தேவையற்ற மன கசப்புகளை மனம் விட்டு பேசி தீர்த்துக் கொள்வீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கப் போகிறது. உத்தியோகஸ்தர்களுக்கு பக்தியின் மீது ஆர்வம் அதிகரித்து காணப்படும். பெண்களுக்கு ஓய்வு தேவை.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்ப உறவுகளுக்கு இடையே தேவையற்ற வார்த்தைகளை பிரயோகிக்காமல் இருப்பது நல்லது. உற்றார், உறவினர்களுக்குள் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய பாதை தெரியும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இடத்திலிருந்து நம்பிக்கைக்கு உரியவர்கள் உதவி செய்வார்கள்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய அறியாமை சில பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பகைவர்கள் மூலம் மறைமுக தொந்தரவுகள் ஏற்படக்கூடும் எனவே கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் என்னும் மேலோங்கி காணப்படும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சகிப்புத் தன்மையுடன் செயலாற்ற வேண்டிய நாளாக இருக்கிறது. தேவையற்ற இடங்களில் வாக்குவாதங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்பதால் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இலக்கை நோக்கி முன்னேற கூடிய நாளாக இருக்கிறது.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பெரிய மனிதர்களின் ஆலோசனை பெறுவீர்கள். குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களின் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்வது நல்லது. முன்பின் தெரியாதவர்களின் அறிமுகம் தவிர்த்துக் கொள்ளுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் ஏற்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் குடும்ப பொறுப்புகள் உணர்ந்து செயல்படுவீர்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நேர்மறையான சிந்தனை பல வெற்றி வாய்ப்புகளை குவிக்க போகிறது. எதிலும் ஜெயம் உண்டாகும் என்பதால் சுபகாரிய முயற்சிகளில் தாராளமாக ஈடுபடலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் விலகி சென்ற உறவுகளை தேடக்கூடிய நாளாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைப்பதில் இருந்து வந்து தடைகள் நீங்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் உங்களுக்கு மதிப்பு, மரியாதை உயரக்கூடிய இனிய நாளாக இருக்கிறது. பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய திட்டமிடல் சிறப்பாக இருக்கும். சுய தொழிலில் நீங்கள் ஏற்றம் காணலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளியிட பயணங்கள் அனுகூல பலன் கொடுக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கடமை உணர்வு அதிகரித்து காணப்படும். எதிலும் நேர்வழியில் செல்வது நல்லது. குறுக்கு வழியில் சென்றால் வம்பு, வழக்குகள் வரக்கூடும் எச்சரிக்கை தேவை. சுய தொழிலில் அதிரடி மாற்றங்கள் ஏற்படக்கூடிய அமைப்பு உண்டு. புதிய தொழிலில் இறங்குபவர்களுக்கு துறைசார் நிபுணர்களின் ஆலோசனை கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும்.