மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் ஏமாற்றம் ஏற்படலாம் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கிடைக்கக்கூடிய வருமானத்தைவிட செலவு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை அதிகம் தேவை. தேவையில்லாத பழிக்கு ஆளாக நேரிடும் என்பதால் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை விட நல்ல நாளாக அமையப் போகிறது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றியை அடையக்கூடிய யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு செய்ய முடியாது என்று நினைத்த காரியம் செய்து விடும் வாய்ப்புகள் அமையும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு மற்றவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புகள் உண்டு. எந்த ஒரு விஷயத்தையும் நிதானமாக கையாளுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் திருப்பங்கள் குழப்பத்தை ஏற்படுத்தலாம். ஆரோக்கியம் மேம்படும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறையுடன் செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து எதிர்பாராத செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. உங்கள் அறிவு திறமையை மேலும் மெருகேற்றிக் கொள்வீர்கள்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் பற்றி பேசி மேலும் பெரிதாகாமல் பார்த்து இருப்பது நல்லது. பெரியவர்களை மதித்து நடந்து கொள்ளுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கையில் காசு புழங்கும் என்பதால் ஆடம்பரமாக செயல்படக் கூடாது. உத்தியோகஸ்தர்கள் இன்று தேவையில்லாத கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கவனமாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இட மாற்றம் குறித்த விஷயங்களில் சாதகப் பலன் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் வருமானம் பெருகுவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய துணிச்சலான முடிவுகள் சாதக பலன் தரும். பூர்வீக சொத்து விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சனைகளை பற்றி பேசி பெரிதாக்காமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சில மன சங்கடங்கள் ஏற்படலாம்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் நிறைவேற கூடிய நல்ல வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இறைவழிபாட்டின் மீது அதிக ஆர்வம் காணப்படும். சமூகத்தின் மீதான அக்கறை மேலோங்கி இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுங்கள்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடமையின் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் சுமூகமாக முடியும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் வருவதற்கு வாய்ப்பு உண்டு. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் கவனம் தேவை.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில்லா பட்டதாரிகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தடைபட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியம் கவனம் தேவை.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகள் உங்களுக்கு சாதக பலனை கொடுக்க இருக்கிறது. நண்பர்கள் வட்டத்தில் தேவையற்ற ஏமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மந்த நிலை காணப்பட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. உத்தியோகஸ்தர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் எதிர்பாராத அதிர்ஷ்டம் வரும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய கருத்துக்களை மற்றவர்களுக்கு திணிக்காமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வேகத்தைவிட நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து அமைதி காப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து பணம் கிடைக்கும். ஆரோக்யம் சீராகும்