மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் நிதானம் இருக்கும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் அரசு வழி காரியங்களில் அனுகூல பலன் பெறுவீர்கள். பெண்களுக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். குடும்பத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்துவிடுவீர்கள். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நண்பர்களுடைய ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களை மென் மேலும் மெருகேற்றிக் கொள்ள முயற்சி செய்வீர்கள். பெண்கள் சுயமாக முடிவு எடுப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சில எதிர்ப்புகள் வந்து மறையும். எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அதனை எளிதாக சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்கள் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும். பெண்களுக்கு இறை வழிபாடுகளில் ஆர்வம் இருக்கும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பெரியோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் இனிய நாளாக இருக்கும். நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றி அடைய போகிறது. சுய தொழிலில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் இருக்கும் என்பதால் கவனம் தேவை. ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் குறையும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புதம் படைக்கும் அற்புத நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றியை நோக்கிய பயணம் இருக்கும். சுய தொழிலில் தீட்டிய திட்டங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் கருத்துக்களுக்கு மற்றவர்கள் மதிப்பு கொடுக்க வேண்டும் என்று போராடுவீர்கள்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எந்த ஒரு முடிவையும் எடுக்கணும் கவனத்துடன் இருப்பது நல்லது. ஒரு முறைக்கு பலமுறை ஆலோசித்து பின் செயலாற்றுவது உத்தமம். சுய தொழிலில் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் ஏற்படும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடல் சோர்வு காணப்படும். ஆரோக்கியம் சீராகும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்த வற்றுக்கு எதிர்மறையாக சில விஷயங்கள் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் கூடுமானவரை விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. சுய தொழிலில் மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பழைய கடன் விஷயங்கள் முடிவுக்கு வரும். பூர்வீக சொத்துக்களில் கவனம் தேவை.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நற்பலன்கள் கிடைக்க போகிறது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இன்று உற்சாகத்துடன் காணப்படக் கூடிய அற்புத வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் உள்ளவர்கள் தேவையற்ற விவாதங்களை தவிர்த்து கொள்வது நல்லது. கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்பதால் கூடுமானவரை விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுய தொழிலில் லாபம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி சுமை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு எனினும் பொறுப்புடன் செயல்படுவீர்கள்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுபகாரிய முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மனோபலம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். மனைவி வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணலாம்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பாதியில் நின்ற வேலைகள் கூட முடிவடைய கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்க்கும் லாபம் கிடைப்பதால் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் சாதுரியமாக செயல்படுவது நல்லது. பெண்களுக்கு கவனம் தேவை.